20 டன் போதைபொருள்: அமெரிக்காவில் சிக்கிய கப்பல்

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்க கடல் பகுதியில், 20 டன் அளவிற்கு கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்த பிரமாண்டமான சரக்குக் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர்.



latest tamil news



2வது சரக்கு கப்பல்


ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட் (J.P. Morgan Asset Management), உலகிலேயே 2வது பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த எம்எஸ்சி கயான் என்ற 10 ஆயிரம் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட கப்பல் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் பிலடெல்பியா துறைமுகத்திற்கு வந்தது.


கொகைன் போதைப் பொருள் :

எம்.எஸ்.சி. கயான் கப்பலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதில், சுமார் 20 டன் அளவிற்கு கொகைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news



230 ஆண்டுகளில் அதிகம் :


10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு போதைப் பொருள் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது கடந்த 230 ஆண்டுகளில் இதுவே முதன்முறை என்கின்றனர் அமெரிக்க சுங்கத்துறையினர்.
இந்தக் கப்பல் பஹாமாஸில் இருந்தும், சிலியிலிருந்தும் பொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நேவார்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்எஸ்சி நிறுவனத்துக்குச் சொந்தமான கார்லோட்டா என்ற கப்பலில் இருந்து ஒன்றரை டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
10-ஜூலை-201913:40:53 IST Report Abuse
Nathan கப்பல் போதையோட மெதப்பா வந்திச்சாக்கும். மோப்பம் பிடிக்க போதயப்பாக்கள் வளைய வந்து கவ்விட்டாங்க.
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
10-ஜூலை-201912:39:53 IST Report Abuse
முதல் தமிழன் Only by using his mouth keeping people not to think about his bad governance.
Rate this:
Cancel
10-ஜூலை-201911:50:39 IST Report Abuse
சோமு ஒரு டன் 908 கிகி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X