மும்பையில் கைதானார் கர்நாடகா அமைச்சர்

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மும்பை: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்களை சந்திப்பதற்காக மும்பையில் உள்ள ஓட்டல் முன் காத்திருந்த கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.







மும்பையில் சொகுசு விடுதியில் தங்கி உள்ள ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏ.,க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவக்குமார் தடுத்து நிறுத்தப்பட்டார். தனக்கு இந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியும் போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக சிவக்குமார் முன்பதிவு செய்திருந்த அறை, மாதாந்திர பராமரிப்பு பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது. இருந்தும் எம்எல்ஏ.,க்களை மீட்காமல் அங்கிருந்த செல்ல போவதில்லை எனக் கூறி கொட்டும் மழையில் சிவக்குமார் காத்திருந்தார்.






இந்நிலையில் பிற்பகல் 2.45 மணியளவில் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஓட்டல் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.இதற்கிடையில் கர்நாடகாவில் பா.ஜ.,வை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்., தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறியும், முன் அனுமதியின்றியும் கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 10 பேர் சபாநாயகருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில், காங்., சார்பில் அபிஷேக் மனு சிங்வி நாளை (ஜூலை 11) ஆஜராக உள்ளதாக காங்., கட்சியின் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
11-ஜூலை-201907:46:53 IST Report Abuse
G.MUTHIAH இந்திய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்,கட்சி தாவினால் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடையை உச்சநீதி மன்றம் விதிக்க வேண்டும். ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கவேண்டும். இப்படி நடந்தால்: ஊழல் நடக்காது நேர்மையாக மக்களுக்கு தொண்டு செய்வார்கள். மக்கள் வரி பணம் நல்ல முறையில் மக்களுக்கே உதவும். மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். உச்சநீதி மன்ற நீதிபதிகள் மற்றும் ஜனாதிபதி மக்கள் வரி பணத்தில் மாதக் கூலி வாங்கினால் உண்மையாக உழைப்பார்கள் என நம்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஜூலை-201904:00:14 IST Report Abuse
meenakshisundaram காங் கை காப்பாற்ற வக்கீல் வின்சன் உடனடியாக வரோணும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜூலை-201918:58:05 IST Report Abuse
தமிழ்வேல் சுவாரஸ்யமற்ற கதை, எந்த கும்பலின் பிடியில் அவர்கள் இருக்கின்றார்கள் என்று இதுவரை தெரியவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X