அறைகளுக்கு அடித்துக் கொள்ளும் கட்சிகள்

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: பார்லி., இரு அவைகளிலும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் பலத்தை பொறுத்தே பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.





தெலுங்கு தேசம் கட்சியின் பலம் லோக்சபாவில் 3 எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபாவில் 2 எம்.பி.,க்கள் என சுருங்கி உள்ளது. இருப்பினும், இதுவரை தாங்கள் வகித்து வந்த பெரிய அறையை விட்டு, பார்லி.,யின் கீழ்தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அறையை ஏற்க மறுத்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தெலுங்குதேசம் இருந்து வந்த அறை எண் 5, தற்போது ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல காலமாக தாங்கள் இருந்து வந்த அறையை ஒய்.எஸ்.ஆர்.காங்.,கிற்கு விட்டுதர தெலுங்கு தேசம் தயாராக இல்லை.

இது பற்றி ஒய்.எஸ்.ஆர்., காங்., எம்.பி.,யான விஜயசாய் ரெட்டி கூறுகையில், எங்களிடம் லோக்சபாவில் 22 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 2 எம்.பி.,க்களும் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் ராஜ்யபாவில் எங்களின் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 3வது தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவது முடியாதது என்றார்.





வெளியேற விரும்பாத டிடிபி :


தங்கள் அறையை எந்த காரணத்திற்காகவும் மாற்றி கொள்ள கூடாது என்பதில் தெலுங்குதேசம் உறுதியாக உள்ளது. இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி குண்டூர் எம்.பி., ஜெயதேவ் காலா, ஒய்.எஸ்.ஆர்.,காங்., இது பற்றி ஏற்கனவே சபாநாயகரிடம் முறையிட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் 1988 ல் என்.டி.ராமாராவ் காலத்தில் இருந்து நாங்கள் இந்த அலுவலகத்தில் இருந்து வருகிறோம். எங்களை யாரும் வெளியே போக சொல்ல முடியாது என்றார்.


அதிமுக.,வின் பெரிய அறையை கேட்குமா திமுக?


தி.மு.க.,விடம் தற்போது 23 எம்.பி.,க்கள் உள்ளனர். அதனால் பார்லி., தரை தளத்தில் உள்ள அ.தி.மு.க., வைத்துள்ள பெரிய அறையை கேட்க தி.மு.க., நினைக்கிறது. அ.தி.மு.க.,விற்கு தற்போது ஒரு எம்.பி., மட்டுமே உள்ளார்.
2014 ல் அ.தி.மு.க.,விற்கு 37 லோக்சபா எம்.பி.,க்களும், 13 ராஜ்யசபா எம்.பி.,க்களும் இருந்தனர். பெரிய கட்சிக்கு அதிக பரப்பளவு கொண்ட, தரை தளத்தில் அறை ஒதுக்கப்பட்டது. குறைவான எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு 3வது தளத்தில் அறை ஒதுக்கப்பட்டது.




ஆனால் ஏற்கனவே பெரிய அறையை ஆக்கிரமித்துள்ள கட்சிகள், தங்களின் எம்.பி.,க்களின் எண்ணிக்கை 2019 லோக்சபா தேர்தலில் சரிந்த போதிலும் தங்களின் அறையை காலி செய்ய மறுத்து வருகின்றனர். 2009 ல் தி.மு.க.,விற்கு 18 எம்.பி.,க்கள் இருந்த போது, தரை தளத்தில் அக்கட்சிக்கு பெரிய அறை ஒதுக்கப்பட்டது. இருந்தும் அந்த அறையை காலி செய்ய ஐக்கிய ஜனதா தளம் மறுத்து விட்டது.


அடித்து கொள்ளும் கட்சிகள் :


2014ல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை பெற திரிணாமுல் கட்சி எம்.பி.,க்களான சுதிப் பதோபத்யாய மற்றும் மறைந்த சுல்தான் அகமது ஆகியோர் முயற்சித்தனர். அப்போது இது தொடர்பாக திரிணாமுல் காங் மற்றும் தெலுங்கு தேசம் இடையே மோதலே உருவானது.இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி அறையை காலி செய்ய கடைசி வரை மறுத்து விட்டது.
பின்னர், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு திரிணாமுல் காங்.,கிற்கு சிறிய அறையை ஒதுக்கிக் கொடுத்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய தோழமை கட்சியாக இடம் பிடித்திருந்த தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து அதே அறையில் இருக்கச் செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-201908:50:08 IST Report Abuse
ருத்ரா வெயில், மழைக்கு, ஒதுங்க உடை மாற்ற ஒரு அறை கூட இல்லாத சாலை ஓர வாசிகளைப் பற்றி இவர்கள் சிந்தித்தால் சண்டை போடுவார்களா!? வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
13-ஜூலை-201903:19:36 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>ஆஹா சந்தித்தால்தானே ஐயா இதெல்லாம் நடக்கும் . ஏவாளுக்கும் எங்கே எந்தஊரிலே சவக்குழின்னும் தெரியாது (புதைச்சால் )அதே எறிச்சால் அதுவும் இல்லீங்க சாம்பலேதான் ADHAIYUM நீரிலோ கடலிலோ கரைச்சுடுவாங்க OSILE ROOM THANTHAAL அதுக்கு இவ்ளோ அடிதடியா...
Rate this:
Share this comment
Cancel
SUNDAR S - chennai,பெர்முடா
11-ஜூலை-201908:49:58 IST Report Abuse
SUNDAR S ஆக எடப்பபாடி பதவி விலக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஜூலை-201907:59:50 IST Report Abuse
Nallavan Nallavan இவர்கள் தான் மக்கள் பிரதிநிதிகள் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X