அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள்

Added : ஜூலை 10, 2019
Advertisement

சென்னை : ''நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, ஊரகப் பகுதிகளில் உள்ள, வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களை வைத்து, நடப்பாண்டில், 312 கோடி ரூபாய் மதிப்பில், 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: நடப்பாண்டு, 1,200 கோடி ரூபாயில், 5,000 கி.மீ., ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்; திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கோட்டம் ஆகிய பகுதிகளில், சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களில், மறு சீரமைப்பு பணிகள், 200.53 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

நடப்பாண்டில், 255.21 கோடி ரூபாய் செலவில், ஊரக சாலைகள் மேம்பாடு மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊரகப் பகுதிகளில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்குவதை தடுக்க, உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும். அதேபோல், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கழிவு நீர் வடிகால்களை சுற்றி, கழிவு நீர் தேங்காமல் தடுக்க, நடப்பாண்டில், 2 லட்சத்து, 500 சமுதாய உறிஞ்சு குழிகள், 183.38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களை வைத்து, நடப்பாண்டில், 10 ஆயிரம் தடுப்பணைகள், 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். கடந்த ஆண்டு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 'வங்கிக் கடன் இணைப்பாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. இலக்கை தாண்டி, 11 ஆயிரத்து, 449 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக பொருளாதார புத்தாக்க திட்டம், நடப்பாண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு, 210.27 கோடி ரூபாய் மதிப்பில், கடலுார், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில், தலா நான்கு வட்டாரங்களில் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்திற்கு, நடப்பாண்டு, 40.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் வழியே, 125 கோடி ரூபாய் செலவில், 25 ஆயிரம் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.***

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X