அரசியல் செய்தி

தமிழ்நாடு

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.24 கோடியில் புதிய கட்டடம்

Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ''பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, 24 கோடி ரூபாய் மதிப்பில், சொந்த கட்டடங்கள் கட்டப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள் : சேலத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், துணை பதிவுத்துறை அலுவலகம்; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, 24 கோடி ரூபாய் மதிப்பில், சொந்த கட்டடங்கள் கட்டப்படும் . திருச்சி வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலக வளாகம், 23.38 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இணையம் வழியே, பதிவுத்துறை ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் சேவைகளை மேலும் செம்மைப்படுத்த, பழைய கம்ப்யூட்டருக்கு பதிலாக, புதிய கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள், 21.63 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
11-ஜூலை-201907:47:12 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj முதலில் செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகம் எத்துணை பொதுஇடங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர் என்பதை ஆய்வு செய்யுங்கள் காஞ்சிபுரத்தில் அநேக பொது இடங்கள் குறிப்பாக மாமல்லன் மகேந்திரபல்லவன் தெருவின் கீழ் நுனியில் உள்ள கே டி எஸ் மணி தெருவுடன் இணைக்கும் குறுக்கு சாலை மற்றும அதனை ஒட்டியுள்ள பொது இடம் ஆக்கிரமிப்பாளர் பிடியிலிருந்து அகற்றிட செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X