சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.24 கோடியில் புதிய கட்டடம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.24 கோடியில் புதிய கட்டடம்

Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (1)

சென்னை : ''பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, 24 கோடி ரூபாய் மதிப்பில், சொந்த கட்டடங்கள் கட்டப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள் : சேலத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், துணை பதிவுத்துறை அலுவலகம்; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, 24 கோடி ரூபாய் மதிப்பில், சொந்த கட்டடங்கள் கட்டப்படும் . திருச்சி வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலக வளாகம், 23.38 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இணையம் வழியே, பதிவுத்துறை ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் சேவைகளை மேலும் செம்மைப்படுத்த, பழைய கம்ப்யூட்டருக்கு பதிலாக, புதிய கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள், 21.63 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X