ரயிலில் 4 லட்சம் கூடுதல் படுக்கைகள்: கோயல்

Updated : ஜூலை 10, 2019 | Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி : 'பசுமை தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாறுவதன் மூலம், அக்டோபர் முதல், தினமும், 4 லட்சம், 'பெர்த்'கள் எனப்படும், படுக்கை இடங்கள், பயணியருக்கு கிடைக்கும்' என, ரயில்வே அறிவித்து உள்ளது.


இது பற்றி ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்போது, ஒவ்வொரு ரயில்களின் கடைசியிலும், மின்சாரம் வழங்கும், 'பவர் கார்' என, அழைக்கப்படும், இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதில், டீசல் மூலம், மின் உற்பத்தி செய்யப்பட்டு, ரயில் பெட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. 'ஏசி' வசதியில்லாத பெட்டிகளுக்கு மின்சாரம் வழங்க, பவர் காருக்கு, ஒரு மணி நேரத்துக்கு, 40 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஏசி பெட்டிகள் என்றால், 65 - 70 லிட்டர் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசலுக்கு, 3 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். ஏசி வசதியில்லாத பெட்டிகளுக்கு, மணிக்கு, 120 யூனிட் மின்சாரம் தேவை. இப்போது, உலக நாடுகள் பலவற்றிலும், ரயிலுக்கு மேல் செல்லும் மின்னழுத்த கம்பிகளிலிருந்து, மின்சாரம் பெறப்பட்டு, அது, ரயில் பெட்டிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த முறையில், சுற்றுச்சூழல் மாசடைவது குறைகிறது. ஏனெனில், இதில், காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படாது. இந்த முறைக்கு, ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டால், ரயில்வேக்கு, டீசல் செலவில், ஆண்டுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும், இதனால், இந்த புதிய முறைக்கு, ரயில்களை மாற்ற முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

வரும் அக்டோபர் மாதம், 5 ஆயிரம் ரயில் பெட்டிகள், இந்த புதிய முறையில் இயக்கப்படும். இதனால், ரயில்களில், பவர் கார் இணைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கலாம். அதனால், அக்டோபர் முதல், பயணியருக்கு தினமும், 4 லட்சம் படுக்கைகள் கூடுதலாக கிடைக்கும். இதனால், ரயில்வேக்கும் வருமானம் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


2.94 லட்சம் காலி பணியிடங்கள்


''ரயில்வேயில் காலியாக உள்ள, 2.94 லட்சம் பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது: ரயில்வேயில், ஜூன், 1ம் தேதி நிலவரப்படி, 2.98 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2.94 லட்சம் இடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. பயிற்சியில் இருப்பவர்கள், விடுமுறையில் இருப்பவர்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஊழியர்கள் தேர்வு நடந்து வருகிறது.

ஊழியர்கள் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். கடந்த, 1991ல், ரயில்வேயில், 16 லட்சத்து, 54 ஆயிரத்து, 985 பேர் பணியாற்றினர். 2019ல், 12 லட்சத்து, 40 ஆயிரத்து, 101 பேர் பணியாற்றுகின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது; ஆனால், ரயில் சேவையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு, அவர் கூறினார்.


தனியார்மயமாகாது


ரயில்வேயை தனியார்மயம் ஆக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரை, எந்த பயணியர் ரயிலும், தனியார் இயக்க, ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு, ஏப்., 1ம் தேதி வரை, 21 ஆயிரத்து, 443 கி.மீ., துாரத்துக்கு, 189 புதிய ரயில் திட்டங்களின் பணிகள், பல்வேறு நிலைகளில் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
11-ஜூலை-201914:02:43 IST Report Abuse
Rameeparithi மாற்றம் ஒன்றே மாறாதது ரயில்வே துறைக்கு மிக மிக முக்கியமானது பயணிகளின் அடிப்படையான போக்குவரத்து சேவையில் நிறைய மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள் 15 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்தாலும் படுக்கை வசதி இருக்கைகள் உறுதி செய்யாமலே இருப்பது வேதனையான விஷயம் கடைசி நிமிடத்தில் முதியோர்களை வைத்துக்கொண்டு மாற்று பயண ஏற்பாடு செய்வது சிரமமான ஒன்று கூடுதல் படுக்கை இருக்கைகள் கண்டிப்பாக அதி விரைவில் அமுல் படுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
11-ஜூலை-201913:46:17 IST Report Abuse
Rajathiraja இந்த படத்தில் காட்டியுள்ளது போல சைடு சீட்டுகளை 3 அடுக்காக மாற்றினால் ரயில் பயணம் என்பது அவர்களுக்கு நரகம் தான். இது ஏற்கனவே லாலு மந்திரியாக இருந்தபொழுது முயற்சித்து தோல்வியடைந்து கைவிடப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
11-ஜூலை-201909:54:08 IST Report Abuse
Appan சுதந்திரம் வாங்கும் பொது இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி..இப்போ 120 கோடி..அப்படின்னா அடிப்படை வசதிகளும் 4 மடங்கு வளர்ந்திருக்க வேண்டும்..ஒரு நாட்டின் உற்பத்தி திறன் -productivity - அந்த நாட்டின் போக்குவரத்து, கம்யூனிகேஷனை சார்ந்து அமைகிறது..இந்திய தொலை தொடர்பில் வளர்ந்து உள்ளது..ஆனால் போக்குவரத்தில் சொல்லும்படி வளர்ச்சி இல்லை..60 கலீல் இருந்த ரயில்வே இப்பவும் அப்படியே உள்ளது..சீனா 60 கலீல் ரயில்வே இந்திய ரயில்வே மாதிரிதான் இருந்தது..அனால் இப்போ உலகில் ரயில்வேயில் முன்னணி உள்ளது..இந்திய விண்வெளி, அணு சக்தி வளர்ந்தது போல் ரயில்வே வளர்ச்சி இல்லை..இந்த 75 வருடத்தில் ரயில்வேயின் கண்டு பிடிப்பு என்ன என்று யாரவது சொல்ல முடியுமா..> வெள்ளைக்காரன் விட்டு சென்ற அதே ரயில்வே, அதே தொழில் நுட்பம்..இன்னும் ஒரு ரயில் பெட்டியும் இந்திய தொழில் நுட்பத்தால் செய்யமுடியவில்லை..அதே போல் ரயில்வே என்ஜின்களும்..அப்போ இந்த துறை ஊழல் மலிந்த துறையாக உள்ளது..பத்து லட்சம் ரயில்வே தொழிலாளர்களின் நலம் முக்கியம்..அதற்காக அவர்களின் நலம் தான் முக்கியம் என்று நாட்டை பற்றி கவலைப்படாமல் ரயில்வே இருக்கலாமா..?.இந்திய சப்ட்வெர் துறையிலம்முன்னணியில் உள்ளது..ஆனால் ரயில்வே இன்னும் முழுமையாக சரக்கு போக்குவரத்தை மின்னணுமயக் ஆக்கவில்லை..ஏனென்றால் ரயில்வே ஊழியர்களின் கிம்பளம் இல்லாமல் போய்விடும்..இப்படி ஒரு துறை இயங்கினால் நாடு எப்படி வளரும்..நாட்டின் உற்பத்தி திறன் போக்குவரத்தை சார்ந்தது..120 கோடி மக்களுக்கு சோறு போட இந்த துறை அசுரர் வளற்சி பேரனும்..இல்லை நாடே ஸ்தம்பித்து விடும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X