பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
போக்சோ,குற்றம்,தண்டனை,அதிகரிப்பு

புதுடில்லி: சிறுமியரிடம் சில்மிஷம் செய்வோருக்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் 'போக்சோ' எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் திருநங்கையரை அவமதிப்பதும் குற்றமாக்கும் சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிறுமியருக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் 2012ல் கொண்டு வரப்பட்ட 'போக்சோ' எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குழந்தைகளுக்கு எதிரான தீவிர பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற குற்றங்களுக்கான தண்டனைகளும் உயர்த்தப் படுகின்றன. குழந்தைகளின் ஆபாச படங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் குற்றத்துக்கான அபராதம் மற்றும் தண்டனையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கையர் மசோதா:


மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையரை புறக்கணிப்பதை தடுக்கும் வகையிலும் அவர்களுக்கு சமூக பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்புகளை அளிக்கும் வகையிலும்

கொண்டு வரப்பட்டுள்ள திருநங்கையர் பாதுகாப்பு மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திருநங்கையரை அவமதிப்பது குற்றமாக பார்க்கப்படும். சமூகத்தின் வளர்ச்சியில் திருநங்கையரும் பங்கேற்பதை இந்த மசோதா உறுதி செய்யும்.

திருநங்கையரை பிச்சை எடுக்க வைப்பது பொது இடங்களில் அனுமதி மறுப்பது பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள அரசு முதல் 100 நாட்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ள சமூக நீதி துறைக்கான இலக்குகளில் இந்த மசோதாவும் ஒன்று. பார்லியின் நடப்பு கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்:


மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து

பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: தற்போது காவிரி கிருஷ்ணா உட்பட ஒன்பது நதி நீர் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக ஒரே ஒரு தீர்ப்பாயமும் அதன் கீழ் தேவைப்படும் இடங்களில் அமர்வுகளும் அமைக்கும் வகையில் சட்ட மசோதா 2017ல் கொண்டு வரப்பட்டது. அதற்கு பார்லிமென்ட் ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுவரை இருந்த தீர்ப்பாயங்கள் தீர்வு காண்பதற்கு 17 - 27 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளன. தற்போது அமைக்கப்பட உள்ள தீர்ப்பாயத்தில் இரண்டு ஆண்டுகளுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மேலும் தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பு தானாகவே அரசிதழில் இடம்பெறும். ஒரு நதிநீர் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு அந்த அமர்வின் பதவிக் காலம் தானாகவே முடிவுக்கு வரும். நாடு முழுவதும் ஒரே தீர்ப்பாயம் இருப்பதால் நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முடியும்.

சிறப்பு தகுதி:


என்.எப்.எப்.யு. எனப்படும் தானாகவே நிதி உயர்வு கிடைப்பது மற்றும் என்.எப்.எஸ்.ஜி. எனப்படும் தானாகவே தகுதி உயர்வு கிடைக்கும் பிரிவின் கீழ் மத்திய ரிசர்வ் போலீஸ் படை எல்லை பாதுகாப்புப் படை போன்ற ஐந்து துணை ராணுவப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது ஆர்.பி.எப். எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படைக்கும் இந்த வசதி கிடைக்கும். இதன் மூலம் இப்படையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக பலன்களும் பதவி மற்றும் தகுதி உயர்வும் கிடைக்கும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முறைசாரா முதலீடுகள்:


சிட்பண்ட் மோசடி போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் முறைசாரா முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அனுமதி பெறாத மோசடி முதலீட்டு திட்டங்கள் மூலம் மக்கள் ஏமாற்றுவது தடுக்கப்படுவதுடன் இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மக்களுக்கு பணம் திரும்ப கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.

தொழிலாளர் சட்டம்:


தற்போது நடைமுறையில் உள்ள 13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒரே தொகுப்பாக்கி 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்கள் அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தும் மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில் வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சேவைப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் அதிக அளவிலான ஊழியர்களுக்கு இந்த சட்டத்தின் பலன் கிடைக்கும்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
11-ஜூலை-201922:12:31 IST Report Abuse

S.Ganesanதிருநங்கைகள் இருட்டான இடங்களில் பெண்களை வழிமறித்து பலரையும் மிரட்டி பணம் பறிப்பதும், ஏன் ஆண்களிடம் இருந்து செல் போன் , பணம் போன்றவற்றை பறித்து செல்வதும் நடக்கிறது. இதை மட்டும் அல்லாது , திருமணம் மற்றும் விஷேச நிகழ்ச்சிகளில் கூட்டமாக வந்து பணம் கேட்பதையும் , தர மறுத்தால் தகாத வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்துவதையும் யார் கேட்பது ? இவர்களுக்கு சாதகமாக சட்டம் இயற்றினால் அவர்களின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும். அதற்க்கு என்ன தீர்வு ?

Rate this:
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
11-ஜூலை-201919:43:43 IST Report Abuse

ஊழல் விஞ்ஞானி என்னப்பா பட்டியலில் இப்போதைய ஒரு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாருமே இல்லையா?......திருந்திய பட்டியல் வேண்டும்

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11-ஜூலை-201919:42:19 IST Report Abuse

தமிழ் மைந்தன்இந்த பட்டியலில் பெரம்பலூர் ஆளு முதல் உங்க ஊழல்தலைவர் வரை யாருடைய பெயரையுமே காணவில்லையே........ ஓ நீங்கள் திமுக ஆளா.....

Rate this:
Suri - Chennai,இந்தியா
11-ஜூலை-201921:23:49 IST Report Abuse

Suriநான் பெயர்.. மாதம்...மாநிலம் எல்லாம் போட்டிருக்கிறேன்.... நான்.. பொலிஸில் FIR பதிந்தவைகள் பெயரை வெளிப்படையாக போட்டிருக்கிறேன். ...

Rate this:
Suri - Chennai,இந்தியா
11-ஜூலை-201921:28:21 IST Report Abuse

Suri2011 சென்சஸ் படி பெரம்பலூரில் 2 ,80 , 000 ஆண்கள் உள்ளனர்... யார் பெயர் என்று குறிப்பிட்டு கூறினால் நீங்கள் உண்மையான தமிழ் மைந்தன். இல்லையென்றால் நீங்கள் யாருடைய மைந்தன் என்று தெரியாது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் ஊழல் தலைவர்???பெயர் குறிப்பிட்டால் நீங்கள் தமிழ் மைந்தன் இல்லையென்றால் நீங்கள் யாருடைய மைந்தன் என்று தெரியாது என்று எடுத்துக்கொள்வோம். இந்த கருது எழுதுவதற்கு திமுக ஆளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் தான் எனக்கு உறுப்பினர் அட்டை பெற்று தந்தீரோ?? ...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X