பதிவு செய்த நாள் :
'வாஸ்து' சாஸ்திரத்தை நம்பும் முதல்வர்
அரண்மனைகளை இடிக்க திட்டமிடுகிறார்

ஐதராபாத்: ஐதராபாத் நகரில் இரண்டு பெரிய அரண்மனைகளை தகர்த்து புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக கட்டடம் கட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். அந்த கட்டடங்கள் 'வாஸ்து' சாஸ்திர அடிப்படையில் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.

வாஸ்து, சாஸ்திரம், அரண்மனை, முதல்வர்


தெலுங்கானா மாநில முதல்வராக டி.ஆர்.எஸ். எனப்படும் தெலுங்கானா ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த கே.சந்திரசேகர ராவ் உள்ளார். தலைநகர் ஐதராபாத்தில் உசேன் சாகர் ஏரிக்கரையில் 25 ஏக்கர் பரப்பில் தலைமைச் செயலகம் மற்றும் அதன் அருகே சட்டசபை அமைந்துள்ளது. எனினும் அந்த கட்டடங்களில் வாஸ்து சரியில்லை என கருதும் முதல்வர் ராவ் எந்த காரணத்தை கொண்டும் தலைமைச் செயலகத்திற்கு செல்வதே இல்லை. மாறாக அவரின் அதிகாரப்பூர்வ இல்லமான 'பிரகதி பவன்' கட்டடத்திலேயே அமைச்சரவை கூட்டம் நிருபர்கள் சந்திப்பு போன்றவற்றை நடத்தி வருகிறார்.

வாஸ்து ஜோதிடர்களின் அறிவுரைப்படி தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியில் எர்ரம் மன்சில் என்ற அரண்மனை மற்றும்

அதன் வளாகத்தில் உள்ள 10 கட்டடங்களை இடித்து 400 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்ட உள்ளார். அதுபோல 150 ஆண்டுகள் பழமையான நிஜாமரா அரண்மனையை இடித்து 100 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டசபை கட்டடம் கட்டவும் தீர்மானித்துள்ளார். இதற்காக கடந்த மாதம் ௨௭ல் நல்ல முகூர்த்த நாளில் அடிக்கல் நாட்டினார்.

மும்பையில் செயல்படும் 'ஹபீஸ் கான்ட்ராக்டர்' என்ற பிரபலமான கட்டடக்கலை வல்லுனர் நிறுவனம் வாஸ்து சாஸ்திரங்களின்படி புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தை வடிவமைத்து வருகிறது. ஆனால் ராவ் முடிவுக்கு பாரம்பரிய கட்டடக்கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

'இந்த அரண்மனைகள் 150 ஆண்டுகளை தாண்டி விட்டதால் பழமையாகவும் ஆங்காங்கே இடிந்தும் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்துவது நல்லது' என முதல்வர் கூறுகிறார். ஆனால் பாரம்பரிய கட்டட ஆர்வலர்கள் 'அரண்மனைகளையும் பாரம்பரிய கட்டடங்களை இடிக்க வேண்டாம். புனரமைத்து பயன்படுத்தலாமே' என ஆலோசனை வழங்குகின்றனர். எனினும் வாஸ்து சாஸ்திரத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள ராவ் பழைய அரண்மனைகளை இடித்தே தீருவேன் என அடம் பிடிக்கிறார். அதன் பின்னணியில் வாஸ்து சாஸ்திர ஜோதிடர்களின் வலுவான அறிவுரை உள்ளது.

எப்போதும் அவர் தன்னுடன் பிரபல வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா என்பவரை வைத்துள்ளார்.

Advertisement

அவர் ஆலோசனைபடியே ராவ் செயல்படுகிறார். எனினும் அவரின் முடிவுக்கு நிஜாம் வாரிசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரம்பரியமான அரண்மனை கட்டடங்களை இடிக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதுபோல காங்கிரஸ் மற்றும் பா.ஜ. கட்சிகளும் கேட்டுக் கொண்டுள்ளன. எனினும் ராவ் முடிவில் மாற்றமில்லை. ஆனால் நீதிமன்றம் 'பிரேக்' போட்டுள்ளது. பாரம்பரிய கட்டடங்களை இடித்து சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் கட்டும் முயற்சியை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அடுத்த உத்தரவு வரும் வரை எர்ரம் மன்சில் உட்பட எந்த ஒரு அரண்மனையையும் இடிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

'நீதிமன்றம் அனுமதி அளிக்கும் வரை எந்தப் பணியையும் மேற்கொள்ளப் போவதில்லை' என ராவ் உறுதி அளித்துள்ளார். எனினும் அவர் முன்னரே பிறப்பித்த உத்தரவுபடி இடிபட உள்ள அரண்மனைகளில் செயல்பட்ட சில அரசு அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றன.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
11-ஜூலை-201922:52:24 IST Report Abuse

Amirthalingam Sinniahஉலகில் கழிவறைகள் இல்லாததில் முன்னணி வஹிப்பது இந்தியா. ஆகும். பொது கழிவறைகளாக மாற்றலாம். வறியவர்களின் தங்குமிட மா க் கலாம், யுத்த்காலத்தில் இராணுவம் தற்காலிகமாக தங்க இடமளிக்கலாம். அரச சொத்து க் களுக்கு வாஷ்த்து எதற் கு?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜூலை-201917:11:59 IST Report Abuse

Endrum Indianகட்டி முடிக்கிறதுக்குள்ளே பதவியிழந்து அலைவாய் .

Rate this:
oce - tokyo,ஜப்பான்
11-ஜூலை-201914:04:52 IST Report Abuse

oceதலைமை செயலகத்தை கட்டிய அவரே அதை இடித்து விட்டு மீண்டும் வேறொரு தலைமை செயலகத்தை கட்டுவது மக்கள் வரிப்பணம் வீணாகும். சொந்த பணமாக இருந்தால் இப்படி வீண்டிப்பாரா. இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லையா. தெலுங்கானா மக்கள் இன்னும் சுய அறிவுக்கு வரவில்லை. ஊர் துட்டு கொழுப்பு.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X