அடுக்குமாடி கட்டடத்தின் அடித்தளம் இடிந்து 5 பேர் பலி

Added : ஜூலை 10, 2019
Advertisement

பெங்களூரு : அக்கம், பக்கத்தில் கட்டப்பட்டு வரும், இரண்டு நான்கு மாடி கட்டடங்களின் அடித்தளம் இடிந்து விழுந்ததில், தம்பதி உட்பட, ஐந்து பேர் உயிரிழந்தனர்; இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த பலரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பெங்களூரு, புலிகேசி நகரின், கூக் டவுன் இரண்டாவது கிராசின், ஹச்சின்ஸ் சாலையில், நான்கு மாடி கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இக்கட்டடத்தில், 15க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். நேற்று அதிகாலை, 2:15 மணியளவில் இவ்விரு கட்டடங்களின் அடித்தளம் மட்டும், திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் நேபாளத்தை சேர்ந்த, காவலாளி நாராயணா, 26, அவரது மனைவி நிர்மலா, 20, இவர்களின் மூன்று வயது பெண் குழந்தை அனுஷ்கா, கூலி தொழிலாளிகள் சம்பு குமார், 27, ககன், 26, ஆகியோர் உயிரிழந்தனர்.கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த கூலி தொழிலாளர்கள், ஏழு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மேயர் கங்காம்பிகா, துணை மேயர் பத்ரேகவுடா நேரில் பார்வையிட்டனர். துணை முதல்வர் பரமேஸ்வர் கூறுகையில், ''அனுமதி பெறாமல், கூடுதல் மாடி கட்ட முற்பட்டதே, கட்டடம் இடிவதற்கு காரணம். கட்டடம் கட்டுவதற்கு தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.''தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சிக்கு உத்தரவிட்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X