பதிவு செய்த நாள் :
16 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
கர்நாடகாவில் உச்சகட்ட குழப்பம்

பெங்களூரு: கர்நாடகத்தில் ஏற்கனவே 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் நேற்று மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதன் மூலம் ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

ராஜினாமா, எம்.எல்.ஏ., சபாநாயகர் , அதிருப்தி


கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே பல்வேறு அதிருப்தி காரணமாக காங்கிரசின் 11 எம்.எல்.ஏ.க்கள், ம.ஜ.த.வின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். பா.ஜ.வினர் ஜனநாயக படுகொலை செய்து விட்டதாக கூறி காங்கிரஸ், ம.ஜ.த. தலைவர்கள் நேற்று காலை ராஜ்பவனை முற்றுகையிட முற்பட்டனர்.

இந்நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்த எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.வினர் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டுமென வலியுறுத்தினர். சபாநாயகர் விதான் சவுதாவில் இருப்பதை அறிந்த காங்.- எம்.எல்.ஏ.க்கள் நாகராஜ் மற்றும் சுதாகர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அவரிடம் கடிதம் கொடுத்தனர். அவர்களை வரும் 17ல் விசாரணைக்கு வரும்படி சபாநாயகர் அறிவுறுத்தினார்.

எம்.எல்.ஏ.,வுக்கு அடி:


இதையடுத்து விதான் சவுதாவிலிருந்து இருவரும் வெளியேற முற்பட்டனர். அப்போது காங்கிரசை சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். நாகராஜ் காரில் ஏறி தப்பினார். சுதாகர் கூட்டத்தினரிடம் சிக்கி கொண்டார். அமைச்சர் பிரியங்க் கார்கே சுதாகரின் சட்டையை பிடித்து இழுத்தார்.

சிலர் சுதாகரை தாக்கினர். அவரை அமைச்சர் ஜார்ஜ் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சித்தராமையாவும் வந்து சுதாகரை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

10 நிமிடத்தில் வர வேண்டும்:


இதற்கிடையில் சுதாகர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் அவரது மனைவி கவர்னருக்கு அவசர கடிதம் எழுதினர். இதையடுத்து சுதாகரை பத்து நிமிடத்துக்குள் ராஜ்பவனுக்கு அழைத்து வரும்படி பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலோக் குமாருக்கு கவர்னர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். கர்நாடக ரிசர்வ் போலீஸ் படை சகிதம் அலோக் குமார் விதான் சவுதாவுக்குள் புகுந்து சுதாகரை மீட்டு கவர்னர் முன் ஆஜர்ப்படுத்தினார். கர்நாடக அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.

மும்பையில் அமைச்சர் கைது:

ராஜினாமா, எம்.எல்.ஏ., சபாநாயகர் , அதிருப்தி

ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் ம.ஜ.த. மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மும்பை நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வர காங்கிரசை சேர்ந்த அமைச்சர் சிவகுமார் மும்பை சென்றார். அவருடன் ம.ஜ.த. அமைச்சர் ஜி.டி.தேவகவுடா, 2 எம்.எல்.ஏ.,க்களும் சென்றனர். இவர்கள் வருவதை அறிந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மும்பை நகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பினர். இதனால் அம்மாநில போலீசார் ஓட்டலை சுற்றி குவிக்கப்பட்டனர். சிவகுமார் மட்டும் காரிலிருந்து கீழே இறங்கி ஓட்டலுக்குள் நுழைய முயன்றார். அவரை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சிவகுமார் போராட்டம் செய்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால் சிவகுமாரை கைது செய்தனர். பின் ம.ஜ.த. தலைவர்களும் அழைத்து வரப்பட்டு அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் மும்பை விமான நிலையத்தில் விடப்பட்டனர்.


Advertisement

சட்டசபை கலைப்பா?

சட்டசபையை கலைப்பது அல்லது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி ஆலோசிக்க, முதல்வர் குமாரசாமி, இன்று காலை, 11 மணிக்கு, அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன், முதல்வர் குமாரசாமி, ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், ஆகியோர், நேற்றிரவு தேவகவுடா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது, கர்நாடகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் பற்றி அவர்கள் பேசினர். இறுதியில், இன்று காலை, 11 மணிக்கு, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் குமாரசாமி கூட்டியுள்ளார். இதில் சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பதா அல்லது ராஜினாமா செய்வதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.


10 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு:

காங்கிரசை சேர்ந்த 11 பேர், ம.ஜ.த.வை சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதில் ஒன்பது கடிதங்கள் முறையாக இல்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் காங்.கைச் சேர்ந்த 7 பேர் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த மூன்று பேர் என 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், எங்களுடைய ராஜினாமாவை ஏற்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில அரசுக்கு சாதகமாக சபாநாயகர் செயல்படுகிறார். எங்களுடைய ராஜினாமாவை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். எங்கள் ராஜினாமா கடிதத்தை உடனே ஏற்கும்படியும், தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி 'இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்றார். இன்று முடிவெடுக்கப்படும்' என அமர்வு கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
11-ஜூலை-201923:03:14 IST Report Abuse

Amirthalingam Sinniahஅரிசியில் கல் இருக்கும், சாக்கடையில் அரசியல் இருக்கும்.குழம்பினால் சாக்கடை தெளிவாகலாம்.

Rate this:
kurinjikilan - Madurai,இந்தியா
11-ஜூலை-201916:07:27 IST Report Abuse

kurinjikilanமத்தியில் காங் கட்சி ஜெயித்திருந்தால் ஒட்டு மொத்தமாக பிற கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை கலைத்திருப்பார்கள்.. காங் கிற்கு ஜனநாயகம் என்பதே கிடையாது.. அதைப்பற்றி பேசவும் அருகதை யில்லை..உள்கட்சி உள்குத்தல் வேலைகளுக்கு இன்னொரு கட்சியைக் குறைகூறுவது அபத்தத்திலும் அபத்தம்.. நம்ம ஊர் மூடர்களுக்கு பிஜேபி யை குறை கூறுவதைத்தவிர வேறொன்றும் தெரியாது..உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாதவர் அறிவிலார் என்ற வள்ளுவர் வாக்கு இவர்களை வைத்தே எழுதப்பட்டது..

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
11-ஜூலை-201914:03:10 IST Report Abuse

Snake Babuஇதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை, இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை,இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை, ஆமா சொல்லிட்டோம் ………...நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X