சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தேடிய கரடி வாகனம் மோதி பலி

Added : ஜூலை 10, 2019
Advertisement

ஆண்டிப்பட்டி : ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில், தண்ணீர் தேடி சுற்றிய கரடி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், இறந்தது.

மதுரை -- தேனி மாவட்ட எல்லையான, ஆண்டிப்பட்டி கணவாய் மலை வனப் பகுதியில், கரடி, மான், நரி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மழை இன்றி, அங்குள்ள விலங்குகள், தண்ணீருக்காக, மலையடி வாரத்தில் உள்ள, தோட்டங்களுக்குள் வந்து செல்கின்றன.நேற்று முன்தினம் இரவில், ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் இருந்து, தண்ணீரை தேடி வந்த, 1 வயது கரடி, மதுரை -- தேனி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், உயிரிழந்தது.

கால்நடை டாக்டர்கள் மூலம், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கரடி யின் உடல், அங்கேயே புதைக்கப்பட்டது. வறட்சியை சமாளிக்க, வனப்பகுதியில், கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X