பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஐந்தே ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி!
'ஜன் தன்' திட்டத்தில் குவிந்த தொகை

புதுடில்லி: வங்கிகளில், 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட கணக்குகளின் இருப்புத் தொகை, அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தே ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜன் தன், ரூ.1 லட்சம் கோடி, வங்கிகள்,ஏழைகள்


வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு எற்படுத்துவதற்காக, 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா' எனும் பெயரில், மக்கள் நிதி திட்டத்தை, 2014ல் சுதந்திர தின உரையின்போது, பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இதையடுத்து இத்திட்டம், 2014 ஆகஸ்ட் 28ல் துவக்கப்பட்டது. ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்கள், அரசு நலத் திட்டங்கள் மூலம் பயன்பெற, இந்த வங்கி கணக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

நிதி தீண்டாமையை அகற்றுவதற்காக இத்திட்டம் துவங்கப்படுகிறது எனவும், வங்கிக் கணக்கின் மூலம், நேரடியாக பணப்

பரிவர்த்தனை செய்யப்படுவதால், ஊழல் மற்றும் முறைகேடுகள் குறையும் எனவும், மத்திய அரசு அறிவித்தது. இந்த கணக்குகளில், குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட, ஐந்தே ஆண்டுகளில், இருப்புத் தொகை, 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள் நிதி திட்டத்தின் கீழ், 36.06 கோடி கணக்குகளில், ஜூலை, 3ம் தேதி நிலவரப்படி, இருப்புத் தொகை, 1 லட்சத்து, 496 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. பயனாளிகளின் கணக்கில், வைப்புத் தொகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஜூன், 6ம் தேதி நிலவரப்படி, 99 ஆயிரத்து, 650 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில், 99 ஆயிரத்து, 233 கோடி ரூபாயாக இருந்தது.

பூஜ்ஜிய இருப்பு கணக்குகளின் எண்ணிக்கை, 2018 மார்ச் மாதத்தில், 5.10 கோடியாக இருந்தது. இது, மொத்த கணக்குகளில், 16.22 சதவீதம் ஆகும். இந்த பூஜ்ய இருப்பு கணக்குகளின் எண்ணிக்கை, 2019 மார்ச் மாதத்தில், 5.07 கோடியாக குறைந்துவிட்டது. இது, மொத்த கணக்குகளில், 14.37 சதவீதம் ஆகும். இத்திட்டத்தில் கணக்கு

Advertisement

வைத்திருப்பவர்களில், 28.44 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு, ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கு எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, 2018 ஆகஸ்ட், 28ம் தேதிக்குப் பிறகு துவக்கப்பட்ட, புதிய கணக்குகளுக்கான, விபத்து காப்பீட்டுத் தொகை, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், 'ஓவர் டிராப்ட்' எனும், மிகைப் பற்று வரம்பும், 10 ஆயிரம் ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 'ஒவ்வொரு வீட்டுக்கும் வங்கி கணக்கு' என்ற நிலையிலிருந்து, 'ஒவ்வொரு தனிநபருக்கும் வங்கி கணக்கு' என்ற இலக்கை நோக்கி இத்திட்டம் தற்போது முன்னேறி செல்கிறது. இத்திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-201907:36:38 IST Report Abuse

ஆப்புஅம்மோடியோவ்..ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சம் போட்டிருவீங்களா? ஆண்டி முதல் அம்பானி வரை எல்லோரும் ஜன் தன்னுக்கு மாறிடுவாங்க.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X