பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அச்சுறுத்தல்!
தாவூத் இப்ராஹிம் கும்பலால்...
ஐ.நா.,வில் இந்திய துாதர் புகார்

நியூயார்க்: 'பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபடி, தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது ஆட்கள் நடத்தும் சட்ட விரோத காரியங்கள், இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளன' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா புகார் தெரிவித்துள்ளது.

U.N,United Nations,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும், ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்பு கவுன்சிலில், 'சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள்' என்ற தலைப்பிலான விவாதத்தில், ஐ.நா.,வுக்கான, இந்திய நிரந்தர துாதர், செய்யது அக்பருதீன் பேசியதாவது: கடந்த, 1993ம் ஆண்டில், இந்தியாவின் மும்பை நகரில் தொடர் வெடி குண்டு தாக்குதல்களை நிகழ்த்தி, ஏராளமானோர் உயிரை பலி வாங்கிய, தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டார்.

அங்கு பதுங்கி வாழும், தாவூத் இப்ராஹிம், அவர் தம்பி, அனிஸ் இப்ராஹிம் தலைமையிலான, 'டி' கும்பல், ஏராளமான சட்ட விரோத செயல்களில் ஈடுகிறது. ஆட்களை கடத்துதல், இயற்கை வளங்களை கொள்ளையடித்தல், போதைப்பொருள் கடத்தல், சர்வதேச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, பயங்கரவாத செயல்களை செய்தல் போன்ற, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின் செயல்பாடு, இந்தியாவுக்கு உண்மையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அவர்களை கட்டுப்படுத்தவும், அவர்களை பிடித்து கொடுக்கவும், அண்டை நாடான பாகிஸ்தான், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'டி' கும்பலின் செயல்பாடு, இந்தியாவுக்குத் தான் பாதிப்பாக அமைந்துள்ளது; அவன் அடைக்கலம் புகுந்துள்ள நாட்டுக்கு, பெரிய அளவிலான பிரச்னை இல்லை. இந்தியாவுக்குள், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது, இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பல், பயங்கரவாதிகளுடன் இணைந்து, உலகம் முழுக்க, பயங்கரவாத செயல்களை நடத்தி வருகிறது.

சட்ட விரோதமாக இவர்கள் சம்பாதிக்கும் பணம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியாக செல்கிறது. இதனால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கும்பலை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு, அக்பருதீன் பேசினார்.

பாக்., 'குட்டு' அம்பலம்:

'கடந்த, 1993ல், மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, 200 பேருக்கும் மேல், கொன்று குவித்த, தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அங்கே, சொகுசாக வாழ்ந்து வருகிறார்' என்பது, இந்தியாவின் ஆணித்தரமான வாதம். ஆனால், 'தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இல்லை; இந்தியா, பொய் புகார் கூறி வருகிறது' என, 36 ஆண்டுகளாக, பாக்., மறுத்து வருகிறது. அந்நாட்டின் இரட்டை வேஷத்தை, பிரிட்டன் கோர்ட்டில், அமெரிக்கா, கடந்த வாரம் அம்பலப்படுத்தியது. லண்டனின், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஜபிர் மோடி, 51, என்ற, தாவூத் கூட்டாளியை, நாடு கடத்தும் வழக்கு விசாரணை நடந்தது. லண்டன் நீதிமன்றத்தில், அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த பதில் மனு, அப்போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தாவூத் மட்டுமின்றி, அவர் தம்பி அனிஸ் இப்ராஹிமும், பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார்' என, தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டது. 'பயங்கரவாதத்திற்கு எதிராக, அமெரிக்காவுடன் இணைந்து போராடுவதாக அவ்வப்போது, 'அறிவிக்கும்' பாக்.,கின் இரட்டை வேஷம் அம்பலமாகியுள்ளது' என, இந்திய வெளியுறவுத்துறை அப்போது சாடியது.


Advertisement

அல் - குவைதா தலைவன் மிரட்டல்:

உலகின் பல நாடு களில், பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி வரும், ஒசாமா பின் லாடன் துவக்கிய, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், தற்போதைய தலைவன், அய்மான் அல்-ஜவாஹிரி, 68, நேற்று வெளியிட்ட மிரட்டல், 'வீடியோ'வில் பேசியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும், 'ஜிஹாதி'கள், எனப்படும் முஸ்லிம் போராளிகள், இந்திய ராணுவத்திற்கு எதிராக, இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தாக்குதல் நடத்த வேண்டும். மனிதர்களுக்கும், ராணுவ தளவாடங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், இந்திய பொருளாதாரம் சீரழிய வேண்டும். அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான், தலிபான் மற்றும் அல் - குவைதா தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான அணியில் இணைந்துள்ளதாக கூறி, தாக்குதல் நடத்தி, இரட்டை வேடம் ஆடி வருகிறது. பாகிஸ்தானுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எந்த சூழ்நிலையிலும், ஜம்மு - காஷ்மீரை மறந்து விடாதீர்கள். அந்த மாநிலத்தை, இந்தியாவிடமிருந்து பிரித்தே ஆக வேண்டும். காஷ்மீருக்கான போராட்டம், நமக்கு சம்பந்தமில்லாத சண்டையில்லை. ஒவ்வொரு, ஜிஹாதி முஸ்லிமுக்கும், அந்த சண்டையில் பங்கு இருக்கிறது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளுக்கு எதிராக சண்டையிடுவது, நம் முதல் பணி என்பதை, நம் அறிஞர்கள், அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-201916:48:58 IST Report Abuse

நக்கல்இந்த மாதிரி தீவிரவாதிகள் உயிருடன் பாக்கில் இருப்பதை வைத்தே சொல்லிவிடலாம் இம்ரானும் அரசாங்கமும் டம்மி பீஸ்கள் என்று..

Rate this:
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201914:54:27 IST Report Abuse

Amreenகாட்டுமிராண்டிகளின் இலக்கண படி அடுத்த மதத்தை சேர்ந்தவனை கொலை செய்ய வேண்டும். பின்னர் அதே மதத்தை சேர்ந்த வேறு பிரிவினரை மேல் உலகத்திற்கு அனுப்ப வேண்டும். யாரும் படிக்கச் கூடாது. ஒருவன் கேள்வி கேட்டால் மேல் உலகத்திற்கு அனுப்ப வேண்டும் ஈவெரா தேசம் எல்லாம் மக்கள் தொகை 25% ஆகும் வரை தான். அதற்கு பின்னால் ஷரியத் தேசம் ஆகிவிடும். ஹிந்துக்கள், மற்ற மதத்தினர் மீது இன அழிப்பு தொடங்கும். பெண் கல்வி மறுக்கப்படும். ஹிந்துக்கள் மற்றும் மதத்தினரின் வழிபாட்டு முறைகள் கேள்வி குறியாக்கப்படும். இதை தான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை வரலாறு சொல்கிறது. இதற்கு ஒரே வழி பொருளாதார ரீதியில் இந்த அக்ரமக்காரர்களை ஒதுக்குவது தான். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு 10 ரூபாய் லாபத்திலும் அவன் 2 ரூபாய் தீவிரவாதத்தில் விதைக்கிறான். நீங்கள் உங்கள் பணத்தை அவனிடம் கொடுத்து தீவிரவாதத்தை பரிசாக பெறுகிறீர்கள். இது உங்களுக்கு எப்போது புரிய போகிறது என்று தெரியவில்லை எனவே நீங்கள் எந்த கடையில் பொருள் வாங்குகிறீர்கள் என்பதை கவனியுங்கள்? யாருடன் வணிக தொடர்பு வைக்கிறீர்கள் என்பதை பாருங்கள்? யாரை வேலைக்கு வைக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்? இல்லை என்றால் உங்கள் பின் வாசலில் ஆபத்து காத்திருக்கிறது

Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
11-ஜூலை-201913:51:17 IST Report Abuse

மாயவரத்தான் ஆகா மோடி அடுத்த ஆளுக்கு குறி வச்சிட்டாருடா.... வச்சிட்டாருடா. இனி தாவூது தப்ப முடியாது. அவன் முடக்க படலாம் அல்லது ஒடுக்கப் படலாம்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X