பதிவு செய்த நாள் :
அமேதியை என்றும் கைவிட மாட்டேன்
தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேச்சு

அமேதி: உத்தர பிரதேச மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியில், தோல்வி அடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல் முறையாக அத்தொகுதிக்கு நேற்று வந்தார். அங்கு கட்சியினருடன் நடைபெற்ற கூட்டத்தில், 'அமேதி தொகுதியை கைவிடமாட்டேன். இத்தொகுதிக்காக, டில்லியில் இருந்து போராடுவேன்' என, ராகுல் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி


ஆய்வு:


காங்., தலைவர் ராகுல், உ.பி.,யின் அமேதி லோக்சபா தொகுதியில், 1999 முதல் போட்டியிட்டு, தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகளில்

போட்டியிட்டார். அமேதி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், ஸ்மிருதி இரானியிடம், 52 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில், ராகுல் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பின், முதல் முறையாக, அமேதி தொகுதிக்கு ராகுல், நேற்று வந்தார்.

பின், சலோன், அமேதி, கவுரிகஞ்ச், ஜெகதீஷ்புர் மற்றும் திலோய் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதியை சேர்ந்த கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஓட்டுச்சாவடி தலைவர்களை சந்தித்து, உரையாடினார். அதன் பின், கவுரிகஞ்ச்சில் உள்ள, நிர்மலாதேவி கல்வி நிலையத்தில், கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை சந்தித்து, தேர்தல் தோல்வி குறித்து, ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

காரணம்:


அக்கூட்டத்தில், ராகுல் பேசியது பற்றி, இளைஞர் காங்., முன்னாள் தலைவர், நதீம் அஷ்ரப் ஜெயசீ, கூறியதாவது: அமேதி என் வீடு. என் குடும்பம். அதை நான் என்றும் கைவிடமாட்டேன். இத்தொகுதியின் வளர்ச்சியில், தடை ஏற்படாது. நான் வயநாடு, எம்.பி.,யாக இருந்தாலும்,

Advertisement

அமேதி உடனான எனது உறவு, பல ஆண்டுகளாக தொடர்கிறது. இத்தொகுதிக்காக, டில்லியில் இருந்து போராடுவேன். உள்ளூர் காங்., தொண்டர்கள், மக்களிடம் இருந்து விலகி இருந்ததே, இந்த தோல்விக்கு காரணம். இவ்வாறு ராகுல் பேசியதாக, அவர் கூறினார்.

நியாயம் கேட்டு சுவரொட்டி!

உ.பி.,யின் அமேதி தொகுதியில், சஞ்சய் நினைவு அறக்கட்டளையின் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் அறங்காவலராக, ராகுல் பொறுப்பு வகிக்கிறார். இந்த மருத்துவமனையில், சமீபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு நேர்ந்ததாக, உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், ராகுல் நேற்று அமேதி வந்தபோது, 'உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ராகுல் நியாயம் வழங்க வேண்டும்' என, காங்., அலுவலக வாசல் முழுவதும் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், அச்சிட்டவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. 'இது, பா.ஜ.,வின் சதி வேலை' என, காங்., தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-201913:46:28 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்அமேதி உன்னை கைவிட்டுவிட்டது , கிளம்பு கிளம்பு

Rate this:
11-ஜூலை-201913:45:48 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்எந்த தொகுதியாக இருந்தாலும் நீங்கள் களத்தில் இறங்கி வேலை செய்யாத ஆள் , எதற்கு இந்த வீண் பில்டப்பு , எதோ வயநாட்டில் மத பாசம் காரணமாக ஓட்டுபோட்டார்கள் மற்றபடி நீங்கள் அவர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-201912:29:06 IST Report Abuse

Lion Drsekarஅப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா என்பார்கள் அதுபோல் இவர்கள் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் இப்போதே மக்களை குழப்புவதில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள், இவர்களது குடும்பத்துக்கு ஒவ்வுவருக்கு ஒவ்வொரு தொகுதி வேண்டும் தற்போது கேரளா (சபரிமலையில் சரண கோஷம் போடக்கூடாது, ஒத்தை அடிப்பதையில் நடக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள்) இது போல் இனமும் ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களை எவ்வளவுக்கெவ்வளவு பிரிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பிரித்து சண்டை, அடிதடி, குத்து, கொலை இப்படி செய்தால்தான் இவர்கள் குளிர் காய முடியும் . தனிப்பட்ட முறையில் இவர்கள் மீது யாருக்குமே எந்த ஒரு கோவமும் இல்லை, ஆனால் இவர்களது கொள்கை , வளர்ப்பு , வளர்த்த விதம் தான் தவறு, இவர்களது கூட்டாளிகள் இதற்க்கு மேல், தான் தன குடும்பம் வாழ எந்த ஏழைக்கும் செல்வார்கள். ஆகவே மக்கள்தான் சிந்திக்கவேண்டும். சற்று கண் மூடினாலும் நாட்டையே விற்று விடுவார்கள், இவர்களுக்கு நாட்டுப்பற்று, மனித வாழ்வு கிடையாது, குடும்பம், குடும்ப வளர்ச்சி, ஆட்சி இதுதான் மூச்சு வந்தே மாதரம்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X