பதிவு செய்த நாள் :
பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்;
திட்டங்களையும் செயல்படுத்துவோம்:
பட்ஜெட் விவாதத்தில் நிர்மலா உறுதி

புதுடில்லி: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த சமரசமும் செய்யாமல், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது,என, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் கூறினார்.

BJP,Budget,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,பட்ஜெட்


மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் பேசினார். முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. இதை வலியுறுத்தி, காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்., தேசியவாத காங்., தேசிய மாநாட்டுக் கட்சி, எம்.பி.,க்கள், லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வரும், 2024 - 2025 நிதியாண்டில், 350 லட்சம் கோடி ரூபாயாக நமது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை நோக்கி, இந்த அரசு முன்னேறி வருகிறது. அதற்காகவே, அடிப்படை கட்டமைப்புக்கான முதலீடுகளை அதிகரித்தும், பல்வேறு துறைகளில்

அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தவும், வர்த்தக வரியை குறைத்தும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தீவிர முயற்சியில் அரசு உள்ளது. அதற்காக, மக்கள் நலத் திட்டப் பணிகளில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். இந்தாண்டு பிப்.,ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 3.4 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், அது, 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து புள்ளி விபரங்களும், தகவல்களும், உயர்த்தி காட்டப்பட்டவை அல்ல; அவை உண்மை நிலவரத்தையே காட்டுகின்றன என்பதை உறுதியிட்டு கூறுகிறேன். இந்த பட்ஜெட்டில், மக்களுக்கு பலனளிக்கக் கூடிய அனைத்து திட்டங்களுக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டுள்ளன. வரும், 2024க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் குழாய் மூலம் விநியோகிப்பதை, அனைத்து மாநிலங்கள் உதவியுடன் நிறைவேற்றுவோம்.

அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்காக, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 100 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும். முதலீட்டை அதிகரிக்க, பிரதமர் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

சர்ச்சையில் சிக்கினார்:

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 11 சதவீதம் இருக்கும் என, கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பட்ஜெட்டில், இது, 12 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த இலக்குகள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில், ஜி.டி.பி.,யின் வளர்ச்சி, 12 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இது குறித்து என்னை எவ்வளவு கிண்டல் செய்தாலும் கவலையில்லை. நான் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் போல் உணர்கிறேன். இதற்கு பிறகும் திருப்தி அடையாத உறுப்பினர்கள், என்னுடைய அலுவலகத்துக்கு வரலாம். இவ்வாறு, அவர் பேசினார். இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமைச்சரின் பேச்சை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, வலியுறுத்தின. அமைச்சரின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டு ஆட்சேபகரமான வார்த்தைகள் இருந்தால், அது நீக்கப்படும், என, சபாநாயகர், ஓம் பிர்லா கூறினார். அதையடுத்து, எதிர்க்கட்சியினர் சமாதானம் அடைந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
11-ஜூலை-201923:07:38 IST Report Abuse

K.n. Dhasarathanபொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவீர்கள் ? தவறான புள்ளி விபரங்களை கொடுத்தா? எந்த புள்ளிவிபரமும் சரியில்லை பொய்தான், உங்கள் குறுக்கீடு புள்ளி விபர துறையில் நுழைந்தது உலகம் அறியுமே, அல்லது பெட்ரோல் டீசல் விலையை ஏற்றியா ? விவசாயிகள் 75 நாட்களுக்கு மேல் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது எட்டி பார்க்காத மோடி இப்போது விவசாயிகளின் நண்பன் என்று கூசாமல் கொள்ளமுடிகிறது.அதைப்போல இதையும் எடுத்துக்கலாமா ? ஏழை மக்கள் தங்கம் வாங்க முடியாதபடி உச்சத்தில் பறக்குதே, இதைத்தான் மேம்படுத்திவிட்டோம் என்கிறீர்களா , கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள் .

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
11-ஜூலை-201920:13:33 IST Report Abuse

Darmavanஎதிர் கட்சிகளுக்கு சரியான பதிலில்லை, பெட்ரோல் விலைக்கு மழுப்புவதுபோல் இருக்கிறது.

Rate this:
konanki - Chennai,இந்தியா
11-ஜூலை-201914:40:48 IST Report Abuse

konankiகொடுங்கோல் ஆட்சி ? எட்டப்பன் ஆட்சி? வாடிகன் ஆட்சி வரலேன்னு வயிற்றில் எரிச்சல் ஜெலூசில் சாப்பிட்டு பாருங்க

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X