கர்நாடக விதான் சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
144 தடை , உத்தரவு,சட்டசபை,விதான் சவுதா

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையை சுற்றி 144 தடையுத்தரவு பிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பல்வேறு அதிருப்தி காரணமாக காங்கிரசின் 11, ம.ஜ.த.,வின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தனர். இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



கர்நாடகாவில் பா.ஜ.,வினர் ஜனநாயக படுகொலை செய்துவிட்டதாகக் கூறி, காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் ராஜ்பவனை முற்றுகையிட முற்பட்டனர். இந்நிலையில் சபாநாயகர் .ரமேஷ்குமாரை, எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.,வினர், நேற்று சந்தித்து, எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்நிலையில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த எம்.எல்.ஏ.க்களில் சுதாகர் என்பவரின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்கினர். அருகிலிருந்த போலீசார், அமைதியாக இருந்தனர். மேலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க விதான் சவுதா வருவதாக தகவல் வெளியானது.

இந்த வேளையில், சபாநாயகர் ரமேஷ்குமார், தன் அறையிலிருந்து அவசர, அவசரமாக வெளியேறினார். விதான் சவுதா களேபரமாகிக் கொண்டிருந்த வேளையில் நேற்று சட்டசபையை சுற்றி இன்று முதல் (ஜூலை 11) ஜூலை 14-ம் தேதி வரை நான்கு நாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
11-ஜூலை-201912:12:45 IST Report Abuse
Chowkidar NandaIndia கான்க்ராஸ் மைண்ட் வாய்ஸ் : சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு. எங்கள் சத்யமூர்த்தி பவனில் கிழியாத வேஷ்டி, சட்டைகளா?
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
11-ஜூலை-201911:08:04 IST Report Abuse
Manikandan Sivalingam கர்நாடக நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.......
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
11-ஜூலை-201910:02:02 IST Report Abuse
Bharatha Nesan எஸ் எம் கிருஷ்ணா பிஜேபியில் இணைந்தது போல் குமாரசாமியும் பிஜேபி-யில் இணைந்து விட்டால் அவருக்கும் கர்நாடகாவுக்கும் மக்களுக்கும் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X