எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போட்டி
புறநானூறுக்கு போட்டியாக திருக்குறள்;
தி.மு.க.,வை வாழ்த்திய பா.ஜ., அமைச்சர்

திருக்குறளை மேற்கோள்காட்டி, மத்திய பட்ஜெட்டை சரமாரியாக விமர்சித்த தி.மு.க., - எம்.பி.,யை, மத்திய அமைச்சர் உட்பட, பா.ஜ., காங்கிரஸ், எம்.பி.,க்கள் பாராட்டிய சம்பவம், லோக்சபாவில் அரங்கேறியது.

புறநானூறு,போட்டி,திருக்குறள்,தி.மு.க.,B.J.P,BJP,Bharatiya Janata Party,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ,அமைச்சர்


லோக்சபாவில், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில், தி.மு.க., எம்.பி., ராஜா, பேசியதாவது; உள்நாட்டு உற்பத்தி, தொழில்வளர்ச்சி, விவசாயம், இதர தொழில் இவற்றின் வருவாயின் அடிப்படையில்தான் பட்ஜெட் தயாரிக்கப்படுவது வழக்கம். ஆனால், முதன்முறையாக, வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நான், 15 ஆண்டுகளாக பட்ஜெட்டுகளை கவனித்துள்ளேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும், மொத்த வருமானம், செலவு மற்றும் வருவாய் மூலக்கூறுகள் இருக்கும். இவை எதுவுமே கூறப்படாத பட்ஜெட் இதுதான்.

நிதியமைச்சர் குறிப்பிட்ட புறநானூறு பாடல் பொருத்தமற்றது. வரி விதிப்பு எப்படி இருக்க கூடாது என்பதற்கான விளக்கம்தான், அது. ஆனால், இப்போதைய பிரச்னை, யாரிடம், எப்படி வரி வசூல் செய்ய வேண்டுமென்பதுதான். அதை திருக்குறள்தான் மிகச்சரியாக சொல்கிறது. அதாவது, ‛இயற்றலும், ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்கிறார் வள்ளுவர்.

ஒரு அரசு, யாரிடம் எப்படி வரி வசூலிக்க வேண்டுமென்பதோடு, அவ்வாறு வசூலித்ததை, சரியாக பத்திரப்படுத்தி, யாருக்கெல்லாம் திருப்பி தர வேண்டும் என்பதை, குறள்தான் பொருத்தமாக போதிக்கிறது. ஆனால், 400 கோடி ரூபாய் வருமானமுள்ள, பெரு நிறுவனங்களுக்கு வரியை குறைத்துவிட்டு, வரி வருவாய் இழப்புகளை ஈடுகட்ட, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்க போவதாக பட்ஜெட் கூறுகிறது.

தொழில் செய்தோ, வேலை பார்த்தோ தான் கடன்களை கட்ட வேண்டும். ஆனால், சொத்துக்களை விற்று, கடனை கட்டுவேன் என்றால், அதற்கு எங்கள் ஊரில், ‛ஊதாரித்தனம்' என்று பெயர்.

Advertisement

தமிழகத்தின் பொம்மை அரசை, இயக்குவதே நீங்கள்தான். அடிமை அரசாக உள்ள அதன்மீது கூட உங்களுக்கு இரக்கமில்லை. தமிழகத்துக்கான, நிலுவை நிதியை தருவதில் உங்களுக்கு என்ன பிரச்னை. இவ்வாறு, ராஜா, பேசினார்.

அவர் பேசி முடித்ததும், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளின், எம்.பி.,க்கள் ராஜாவுடன் கை குலுக்கினர். மத்திய அமைச்சர் ஒருவர், ராஜாவின் மேஜையில், ஒரு பேப்பரை வைத்தார். அதில், ‛சூப்பர், வாழ்த்துக்கள், அருமையான பேச்சு. ஆக்கபூர்வமான விமர்சனம் கொண்ட இப்பேச்சை, அரசு, சுயபரிசோதனை செய்யும். நன்றி' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஜூலை-201913:02:45 IST Report Abuse

Malick Rajaசொல்லறிவு வேண்டும் .. இல்லை தன்னறிவு வேண்டும் இல்லையெனில் கருத்துக்கள் மூலம் தானாக வெளிவந்துவிடும் என்பது நிரூபணம்

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூலை-201916:15:23 IST Report Abuse

Darmavanதிருக்குறள் மனனம் செய்ய/ஞாபகம் வைக்க எளிது பெரிய அறிவு தேவையில்லை.ஆனால்புறநாநூறுக்கு அறிவு தேவை..அந்த வித்தியாசமே.

Rate this:
Siva - NYC,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201919:47:49 IST Report Abuse

Sivaஅடடா ஆழ்ந்த பொருள்.. என்ன அருமையான சிந்தனை.. :) ...

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
12-ஜூலை-201911:29:41 IST Report Abuse

S.Ganesanஇங்கே என்ன பாராளுமன்றத்தில் தமிழ் பட்டி மன்றமா நடத்தினாங்க ? ஒழுங்கா வேலையா பாருங்க. புறநானூறுக்கு திருக்குறளில் பதில் சொல்வதால் இவர்கள் செய்த அயோக்கியத்தனம் இல்லை என்றாகி விடுமா ?

Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X