அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களா?
சட்டசபையில் விவாதம்

சென்னை: ''தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், பிற மாநில மாணவர்கள் சேர்க்கப்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபை, கவன ஈர்ப்பு,  ஒதுக்கீடு,சான்றிதழ்


சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


தி.மு.க., - பழனிவேல் தியாகராஜன்: 'நீட்' தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 2017ல், இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று,

வெளிமாநில மாணவர்கள், தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, இருப்பிட சான்றிதழ் தொடர்பாக, சில விதிமுறைகளுடன், அரசாணை பிறப்பிக்கப்பட்டது; 2018ல் இந்த பிரச்னை எழவில்லை. இந்த ஆண்டு மீண்டும், இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று, வெளிமாநில மாணவர்கள் சேர்வதாக தகவல் வந்துள்ளது. இப்பிரச்னைக்கு, அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

அமைச்சர், விஜயபாஸ்கர்: தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், வெளிமாநில மாணவர்கள் சேரக்கூடாது என்பதில், அரசு தெளிவாக உள்ளது. இந்த முறை, மதிப்பெண் அடிப்படையில், 39 ஆயிரத்து, 13 விண்ணப்பங்கள் வந்தன. பல்வேறு சான்றிதழ்களை சரி பார்க்கிறோம்.

Advertisement

தேர்வு குழு, அனைத்தையும் கண்காணிக்கிறது. இதுவரை, 3,614 பேர் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர், இங்கு படித்ததற்கான சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களை கேட்கிறோம். இதற்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனினும், தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக, இதை செய்கிறோம். மேலும், மாணவர்களிடம் சுய சான்று பெறுகிறோம். அதில், தவறான சான்றிதழ் கொடுப்பது தெரிய வந்தால், என்னை நீக்கம் செய்யலாம் என, ஒப்புதல் அளிக்க செய்து, கையெழுத்து பெறுகிறோம். எனவே, வெளி மாநிலத்தவர்கள் தவறான சான்றிதழ்களுடன், இங்கு சேர முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
11-ஜூலை-201918:51:48 IST Report Abuse

J.Isaacஅதிகமாக மலையாளிகள் இருப்பார்கள்

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
11-ஜூலை-201913:36:10 IST Report Abuse

Needhiyin Pakkam Nil ஊழல் அதிகாரிகள் இருக்கும் வரைக்கும் உங்களால் யாரையும் அடையாளம் காண முடியாது, தமிழ் பேச தெரியாத இங்கிலாந்திலேயே படித்த தமிழனும் தமிழ்நாட்டில் இருக்கிறான் தமிழ் பேச தெரிந்த இங்கிலாந்து விவசாயியும் பாண்டிச்சேரியில் இருக்கிறார் இதில் யார் தமிழர் இங்கே................

Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
12-ஜூலை-201915:02:34 IST Report Abuse

வால்டர்தம்பி, ஆரம்ப பாடசாலையில் இருந்து இங்கே கல்வி கற்றவர்கள் தான் தமிழக மாணவர்கள். வேறு மாநிலங்களில் பயின்றுவிட்டு இருப்பிட சான்றுதல் மட்டும் இங்கே வாங்கிவிட்டு வருகிறார்களே அவர்கள் தமிழக மாணவர்கள் அல்லர். புரியுதோ. ...

Rate this:
raguraman venkat - Madurai,இந்தியா
11-ஜூலை-201908:29:27 IST Report Abuse

raguraman venkatஇங்குள்ள பல்கலைக்கழகங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை - ஆனால் அவர்களுடைய கல்விக்கட்டணம் அதிகமாக இருக்கும். நீங்கள் அதே மாநிலத்திற்கு மாற்றல் செய்தாலும் ஒரு ஆண்டு தங்கி மாநில வரி செலுத்தியபின்தான் அந்த மாநில கட்டணத்தில் படிக்க முடியும். இந்தியாவிலும் இதுபோல செய்யலாம். அதை விட்டு விட்டு அனுமதி மறுப்பது சரியல்ல. இந்தியாவுக்குள் ஒரு மாணவன் எந்தக்கல்லூரியிலும் படிக்க வகை செய்யவேண்டும்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஜூலை-201908:54:33 IST Report Abuse

ஆரூர் ரங்உள்ளூர் மொழி அறியாமல் மருத்துவக் கல்வியை சரியாகப் படிக்க முடியாது. நோயாளிகளிடம் பழக முடியாது . ஆங்கிலம் தெரியாதவர்கள் இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ மருத்துவ மேல்படிப்பு படிக்கமுடியாது .இங்கும் அதுதான் கொண்டுவரப்படவேண்டும் .ப்ளஸ் டு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்களுக்கு மட்டுமே சீட் தரவேண்டும் ...

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-ஜூலை-201915:23:27 IST Report Abuse

Mirthika Sathiamoorthiநான் படிச்சிட்டு தமிழ்நாட்டுலயா வேலைசெய்யப்போறேன்...எங்க ஊரு பீஹாரு பக்கமுள்ள.... தமிழில் படமாக படித்தவருக்கு மட்டுமே சீட்டு...ஹஹஹஹஹ் சிரிப்பா இருக்குங்க...இவளவு அப்பாவியா நீங்க......2012 இல் இருந்து தமிழகத்தில் ஒரு சட்டம் இருக்கு... கட்டாய தமிழ் பாடம் எல்லாப்பள்ளிகளிலும் பின்பற்றுகிறோமோ இல்லையா அது வேறவிஷயம்...ஹரியானாவில் முமொழிக்கொள்கையில் அவங்க மூணாவதா வச்சிருக்கறது தமிழ் .. அவனுக்கெல்லாம் இங்க சீட் கொடுதிறலாமா?.....ஒட்டு மொத்த இந்தியாவில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற 91% மாணவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை பாடமாக படித்தவர்கள்...இப்போ இருக்கிற நிலைமையில் இவனுக்கு சீட் கொடு அவனுக்கு சீட் கொடுன்னெல்லாம் கேக்குற உரிமையை இழந்து ரொம்ப நாளாச்சு ...எல்லாத்தையு மத்திய அரசுகிட்டே அடமானம் வச்சாச்சு.. ....இன்னொரு ரகசியம் காத கொடுங்க இதை யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க, இந்தத்தடவ நீட் பரிட்சையில் 350 மார்க்குக்கு அதிகம் எடுத்ததில் 65 சதவீதம் ரெண்டாம் முறையும் மூணாம் முறையும் எழுதினவங்க... இனி வரும் வருஷம் இந்த சதவீதம் அதிகரிக்கும்ன்னு பேசிக்கிறாங்க...இனிமே டாக்டர் படிக்கணும்ன்னா +2 + 2 படிக்கணும்..முதல் +2 பன்னிரெண்டாம் வகுப்பை குறிக்குது அடுத்த +2 ரெண்டு வருஷம் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்கறதை குறிக்குது.... மொத்தம் 14 வருஷம் படிச்சா நீங்க டாக்டர்தான் போங்க..இன்னும் கொஞ்சம் கிட்டவங்க.....இது பரமரகசியம்.. இந்த ரெண்டாவது மூணாவது அட்டம்ப்ட் ...நீட் கோச்சிங் சென்டர் அட்மிஷன் மற்றும் வாடகைக்கு வீடெடுத்து தங்கி படிக்கற செலவு ரெண்டுவருஷத்துக்கு கணக்கு போட்ட தனியார் பொறியியல் கல்லூரியில் பணம் கொடுத்து சேர்வதை விட அதிகமாம்..இவளவு செலவு பண்ணறதே அரசு மருத்துவ கல்லூரியில் இலவசமா படிக்கத்தான்..ஒரு வேலை தனியார் கல்லூரிதான் சீட்டுனாலும் காசுகொடுக்க இந்த பெத்தவங்க தயாரா இருக்காங்களாம்..அதுமட்டுமல்ல இந்த வருஷம் 2800 சீட்டில் 3 இல் 2 பங்கு ( 1800 சீட் ) இவங்கதான் படிக்க போறாங்களாம்....இது பத்தாதுன்னு இந்த மாதிரி ஏழைக்குடும்பத்துக்கு 10 % இடவொதுக்கீடு மத்திய அரசு கொடுக்கசொல்லுதாம்...அப்புடி செஞ்சா கூடுதலா 500 சீட் மருத்துவத்தில் கிடைக்குமாம்....ஏழைங்க வாழ்வு உயர என்னமா உழைக்கிறாங்க....எனக்கு தெரிஞ்ச ரகசியம் உங்கள்கிட்டே மட்டும் சேர் பண்ணியிருக்கேன்...புரிஞ்சு பொழச்சுக்கோங்க.. ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X