பொது செய்தி

தமிழ்நாடு

10 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் அத்திவரதரை காண ஜனாதிபதி நாளை வருகை

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

காஞ்சிபுரம் : அத்திவரதரை 10 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இந்த வைபவத்தை காண ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை வருவதால் அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 1ல் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வைபவம் துவங்கிய நாளில் 60 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். பின் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்தனர். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவதால் இரவு 8:00 மணி வரை இருந்த தரிசன நேரத்தை இரவு 10:00 மணி வரை மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது.இதனால் தினமும் 1.5 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் 10 நாட்களில் 10 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆனி கருடசேவை இன்று நடைபெறுவதால் மாலை 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே முக்கியஸ்தர் விரைந்து தரிசனம் செய்ய வழங்கப்படும் 'டோனர் பாஸ்' எனும் சிறப்பு அனுமதி அட்டையை சிலர் போலியாக தயாரித்து கோவிலுக்குள் நுழைவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூலை-201908:56:20 IST Report Abuse
Bhaskaran ஐம்பதாண்டுகளுக்கு முன் ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது மதுரை கோவில் கும்பாபிஷேகத்துகு வருவதாக இருந்தார் திராவிடக்கட்சிகள் எதிர்ப்பால் வரவில்லை இவர் இப்போது வந்தால் பக்தர்களுக்குத்தான் சிரமங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X