திருத்தணி:திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், இன்றுடன், நடப்பு கல்வி யாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவ - -மாணவியர் சேருவதற்கான நிறைவு கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், 2019-20ம் கல்வியாண்டில், இளங்கலை முதலாமாண்டில் சேருவதற்கு மொத்தம், 1,585 மாணவர்கள் விண்ணப்பித்துஇருந்தனர். 550 மாணவர்கள் இவர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி, கடந்த மாதம், 17 - 21ம் தேதி வரை நடந்தது. இதில், 686 இடங்களில், 550 மாணவ - மாணவியர் புதியதாக சேர்ந்தனர். இவர்களுக்கு, கடந்த மாதம், 24ம் தேதி முதல் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மீதமுள்ள காலியிடங்களில் மாணவ- - மாணவியர் சேர்க்கைக்கு இன்று, கலந்தாய்வு நிகழ்ச்சி, காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
சேர்க்கை
விண்ணப்பித்து, 'சீட்' கிடைக்காத மாணவர்கள், இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்று இளங்கலை பட்டப்படிப்பில் நடப்பாண்டில் சேர்ந்துக் கொள்ளலாம்.தகுதி அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், இன்றுடன், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவடைகிறது என, கல்லுாரி முதல்வர் தெரிவித்தார். 20 சதவீதம் அதிகரிப்புகல்லுாரியில் சேருவதற்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், கல்லுாரி நிர்வாகம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என, சென்னை பல்கலைக் கழகத்திடம் கோரியது. இக்கோரிக்கையை ஏற்று, கூடுதலாக, 20 சதவீதம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது. அந்த, 20 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கு, இன்று கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், மொத்தம், 260 மாணவர்கள், இன்று, சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.