பொது செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல்

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல்

சோழவரம்:இரு சக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும் என, பெட்ரோல் பங்க் நிறுவனம் அறிவித்து, வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்தது.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, பொன்னேரி, ஏ.எஸ்.பி., பவன்குமார் ரெட்டி ஆகியோர் தலைமையில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.விழிப்புணர்வுசோழவரம் அடுத்த, ஜனப்பச்சத்திரம் கூட்டுசாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தரராஜன் முருகேசன், ராஜராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்போர் பெரும்பாலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் எனவும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.இலவச ஹெல்மெட்மேலும், ஹெல்மெட் அணியாமல் வருவோர் மற்றும் மது போதையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் வினியோகம் இல்லை.அதேபோன்று, 18 வயதுக்கு கீழ் வரும் சிறார்களுக்கும், பெட்ரோல் வழங்கப்படாது என, தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனம் அறிவித்து, வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்தது.ஹெல்மெட் அணியாமல், பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளில் சிலருக்கு, இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூலை-201921:19:35 IST Report Abuse
kumar petrol vilai kuraikka entha stepm illa... helmet pottaathaan petrolaam...
Rate this:
Share this comment
Cancel
11-ஜூலை-201912:04:34 IST Report Abuse
வெங்கடேஷ் " ஹெல்மெட்... கட்டாயம் தேவை... ஆவண பறிப்பு... கட்டாயம் தேவையா? "ஒரு மாற்று யோசனை..."இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்...அவ்வாறு அணியாவிட்டால்...ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்ய, தமிழக அரசு அதனை ஏற்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது..." இவ்வாறு ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்வதற்க்கு பதில்...ஹெல்மெட் இல்லாத வாகன ஓட்டிகளிடம்,ரூ.500 அல்லது ரூ.1000 ரூபாய் வாங்கி கொண்டு ஒரு நல்ல தரமான தலைக்கவசத்தை அவர்களிடம் கொடுத்து, அணிய வைக்கலாம்... இதனால் மறுமுறை அவர், நிச்சயம் தலைக்கவசம் இல்லாமல் வரமாட்டார்... அப்படியே வந்தாலும்...மறுபடியும் அவர்களிடம் பணம் வாங்கி இரண்டாவதாகவும் தலைக்கவசத்தை கொடுக்கலாம்...இதனால் மூன்றாவது தடவையும் தலைக்கவசம் இல்லாமல் வருவார்களா?...அட, அப்படியும் தலைகவசம் இல்லாமல் வரட்டுமே... எத்தனை தடவை தலைக்கவசம் இல்லாமல் வந்தாலும்... அத்தனை தடவையும், பணத்தை வாங்கிக்கொண்டு தலைக்கவசம் கொடுக்கலாமே?...நிச்சயம் மறுபடி, மறுபடி வரமாட்டார்... ஏனென்றால், எத்தனை தலைக்கவசம் தான் அவர்கள் வாங்குவார்? இதே மாதிரியான விதிகளை வாகன இன்சூரன்ஸ் விஷயத்திலும் கடைபிடிக்கலாம்... இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்குரூ.700/- அல்லது ரூ.1000/- வாங்கிகொண்டு இன்சூரன்ஸை போட்டு கொடுக்கலாம்...மறுபடி நிச்சயம், அவர் இன்சூரன்சோடு தானே வருவார்.. அதே போல் ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வந்தால், LLR போட்டு கொடுக்கலாம்.. ஒரு வருடத்தில் அனைவரும் அனைத்தும் வைத்து இருப்பார்கள்... "மக்களுக்காக மக்களால் உருவாக்க பட்ட(து)" நம் அரசின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல, இந்த யோசனையை அனைவருக்கும் பகிருங்கள்..."முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மட்கட்குஇறையென்று வைக்கப் படும்."நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புவோம்...நம்பிக்கை நல்ல மாற்றம் தரும்...நல்ல மாற்றம் நல்வாழ்வு தரும்...
Rate this:
Share this comment
Cancel
11-ஜூலை-201909:23:27 IST Report Abuse
அருணா இது நல்ல ஐடியா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X