தோனி நோ-பாலில் அவுட்? அம்பயர் தவறால் தகர்ந்ததா கோப்பை கனவு

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
மான்செஸ்டர்: உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, 'நாட் பால்' ஆகி இருக்க வேண்டியது. அதனை அம்பயர் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு அரையிறுதியோடு முடிவுக்கு வந்தது.இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில், நியூசி., இலக்காக நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மான்செஸ்டர்: உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, 'நாட் பால்' ஆகி இருக்க வேண்டியது. அதனை அம்பயர் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு அரையிறுதியோடு முடிவுக்கு வந்தது.latest tamil newsஇங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில், நியூசி., இலக்காக நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, படுதோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக கட்டமைத்து கொண்டு சென்றனர். சிக்சர், பவுண்டரிகளாக ஜடேஜா விளாச, தோனி அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றார்.


latest tamil newsமுக்கிய தருணத்தில் ஜடேஜாவும் அவுட் ஆக, தனி ஆளாக போராட தோனி தயாரானார். அதற்கு தகுந்தாற்போல, 49வது ஓவரின் முதல் பந்தில் அருமையான சிக்சர் ஒன்றையும் விளாசினார். துரதிர்ஷ்ட வசமாக அந்த ஓவரின் 3வது பந்தில் 2 ரன்னுக்கு ஓட ஆசைப்பட்ட தோனி, ரன் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். ரசிகர்களின் நம்பிக்கையும் அதோடு தகர்ந்தது.


latest tamil newsஇந்நிலையில், தோனி ரன் அவுட் ஆன பந்து 'நாட் பால்' என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 3வது பவர் பிளே ஓவர்களான, 40- 50 ஓவர்களில் '30 மீட்டர்' வட்டத்திற்கு வெளியே, 5 பில்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் ஆனால், தோனி அவுட் ஆன பந்தில் உள்வட்டத்திற்கு வெளியே 6 பில்டர்களை நியூசி., கேப்டன் வில்லிம்சன் நிறுத்தியிருந்தார். ஐசிசி விதியின் படி, அந்த பந்து நாட் பால் என அம்பயர்கள் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதனை அம்பயர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. 'நோ - பால்' சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்க்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
12-ஜூலை-201909:49:05 IST Report Abuse
southindian வெற்றி தோல்வி சகஜம் இவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் விளையாடினார்கள்
Rate this:
Cancel
Thiyagarajan - Bangalore,இந்தியா
11-ஜூலை-201917:05:02 IST Report Abuse
Thiyagarajan அது பந்து இல்லை என அம்பயர் அறிவித்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Mal - Madurai,இந்தியா
11-ஜூலை-201914:55:44 IST Report Abuse
Mal Dinesh Karthik ion was absurd. Just because he married (second) a player (some Christian Deepika) ( and heard that his FIL is influential) he has got a chance .. Even Virat didn't play like a captain. Captaincy should be given to good players ... Experimentation should be there...only then every player will be motivated... Five continuous games whoever plays nicely, has good ss can be made a captain and if he is good continue, else switch. Winning team is important and not a single person. Ashwin was a good spinner ..and don't know which politics was responsible for his denial. I quit watching continuous cricket long back ... Occasionally now n then I watch.... A person who was not even patriotic to have his wedding in India (Virat Kohli) is made a captain... Only who plays sincerely should be there... Not people who go behind money and advertisements.
Rate this:
Nethiadi - Chennai ,இந்தியா
17-ஜூலை-201909:28:08 IST Report Abuse
Nethiadi வெளிநாட்ல கல்யாணம் பண்ண அவன் நாட்டுப்பற்று இல்லாதவனா? எங்கேந்து டா வரீங்க? தினேஷ் கார்த்திக் கிறிஸ்டின் பொண்ண கல்யாண பன்னிருக்கான அதனால சரியாய் விளையாடலையாம். தமிழா உன்னால பேச முடியல நீ லாம் எதுக்கு கமெண்ட் பண்ணுரே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X