பொது செய்தி

இந்தியா

டாக்டர்கள் பாதுகாப்பு :சிறப்பு குழு ஆலோசனை

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
டாக்டர்கள் பாதுகாப்பு, சிறப்பு குழு, ஆலோசனை

புதுடில்லி: பணியில் இருக்கும் டாக்டர்கள் மீதான தாக்குதல் மற்றும் மருத்துவமனைகளில் வன்முறையை தடுக்கும் வகையில், மத்திய சட்டம் கொண்டு வருவது குறித்து, மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள் மீது கடந்த மாதம் சிலர் தாக்குதல் நடத்தினர். நாடு தழுவிய அளவில், டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது, 'டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மத்திய சட்டம் கொண்டு வர வேண்டும்' என, ஐ.எம்.ஏ., வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, இந்த சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய, 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை, மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்தது.


latest tamil news




உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஐ.எம்.ஏ., டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சங்கப் பிரதி நிதிகள், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.புதிய சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்தக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
11-ஜூலை-201906:51:09 IST Report Abuse
Anandan குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரை சிறையில் தள்ளிய புண்ணியவான்கள் ஆட்சி செய்கின்றனர்.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11-ஜூலை-201907:59:13 IST Report Abuse
Nallavan Nallavanகுழந்தைகளைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் மருத்துவர் எதனால் சட்ட நடவடிக்கைக்கு ஆளானார் என்பது தெரியுமா அறிவாளியே ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X