'கிரீன் கார்டு' வரம்பு நீக்கும் மசோதா நிறைவேறியது

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (16)
Advertisement
US House, country cap, Green Card, அமெரிக்கா, கிரீன் கார்டு

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், 'கிரீன் கார்டு'க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம்.இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்கள், 'எச் 1 பி' விசாவை பெறுகின்றனர். அவர்களில் பலர் நிரந்தரமாக அங்கு குடியேற விரும்பினால் முடிவதில்லை.

காரணம், எச் 1 பிவிசா வைத்திருப்பவர்களில், தகுதியுள்ள, 7 சதவீதம் பேருக்கு தான், விண்ணப்ப தேதியின் அடிப்படையில், கிரீன் கார்டு எனப்படும், 'எச் ஆர் 1044' விசா வழங்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான இந்திய வல்லுனர்கள், 70 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த, 7 சதவீத உச்ச வரம்பை நீக்க வகை செய்யும் சட்ட மசோதா, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், நிறைவேற்றப்பட்டது.






இந்த மசோதா செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இங்கு ஆளும் குடியரசு கட்சியினர் அதிகம் உள்ளனர். இதன் பின்னர் இந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்து போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
11-ஜூலை-201918:58:30 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI இங்க இருக்கற அரசியல்வாதிங்க நிறையபேர் புள்ளைங்கள் அமெரிக்காவுலதான் இருக்கானுங்க
Rate this:
Share this comment
Cancel
11-ஜூலை-201916:40:56 IST Report Abuse
ஆப்பு அப்போ அமெரிக்காவுல ரெண்டு கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம். எறங்கி அடிக்குறாரு மோடி ஐயா...அப்பிடியே சீனா, கர்கிஸ்தான், ஃப்ரான்சு, ரஷ்யாவுலேயும் வேலை வாய்ப்பு உருவாக்குங்க ஐயா...
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
11-ஜூலை-201914:23:00 IST Report Abuse
chails ahamad எந்த ஒரு தமிழரும் அமெரிக்க மோகத்திலும் இல்லை என்பதே உண்மையாகும் .
Rate this:
Share this comment
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
11-ஜூலை-201914:59:26 IST Report Abuse
sridharயாரு சொன்னது அங்கே எந்த வூரிலும் போய் பாருங்கள் தெரியும் எவ்வளவு தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று இன்றும் அலைகிறார்கள் நிரந்தர குடிஉரிமைக்காக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X