சபாநாயகர் முன் 10 எம்எல்ஏக்கள் ஆஜர்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (15)
Advertisement
அதிருப்தி எம்எல்ஏ, கர்நாடகா, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ராஜினாமா கடிதம் அளித்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 10 பேரும் இன்று(ஜூலை 11) மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன்படி ஆஜராகினர்.

காங்கிரசை சேர்ந்த 11 பேர், ம.ஜ.த.வை சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதில் ஒன்பது கடிதங்கள் முறையாக இல்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் காங்.கைச் சேர்ந்த 7 பேர் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த மூன்று பேர் என 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், எங்களுடைய ராஜினாமாவை ஏற்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில அரசுக்கு சாதகமாக சபாநாயகர் செயல்படுகிறார். எங்களுடைய ராஜினாமாவை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். எங்கள் ராஜினாமா கடிதத்தை உடனே ஏற்கும்படியும், தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.






தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி 'இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதத்தை வழங்கலாம். இது குறித்து, சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-ஜூலை-201920:41:57 IST Report Abuse
RajanRajan என்னமா ஒருத்தன் விடாம பபூன் சீன் ஓட்டுறாங்கப்பா. இதை பார்த்து இன்னுமா ஜுட்ஜ் சாமிகள் மயக்கமடிச்சு விழ வில்லை. இவிங்க கோர்ட்டுக்கே சபாநாயகர் அல்வான்னு ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்துருவங்களோ.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜூலை-201918:55:02 IST Report Abuse
தமிழ்வேல் எந்த மாநிலத்தில நடக்குது சார் ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11-ஜூலை-201916:35:47 IST Report Abuse
தமிழ் மைந்தன் அடடே......ஊழல்திமுக போல இப்படி புலம்ப விட்டுட்டாங்களே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X