பார்லி., முன்பு சோனியா, ராகுல் போராட்டம்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement

புதுடில்லி : பா.ஜ.,வினர் கர்நாடக, கோவா மாநிலங்களில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பதை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட, காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள், போராட்டம் நடத்தினர்.



latest tamil news




பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பதாகைகளுடன், காங்கிரஸ் எம்.பி.,க்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, '' கர்நாடகா, கோவா மாநிலங்களில் மத்திய அரசு ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் சக்திகளை ஊக்குவிக்கிறது,'' என்று சாடினார்.


latest tamil news




கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் தங்களை தனிக்குழுவாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், அங்கு, காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இப்பிரச்னைக்கு பா.ஜ.,வே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaravel -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூலை-201921:00:48 IST Report Abuse
Kumaravel ஜனநாயகத்தை நீங்கள் காப்பாற்றியது பற்றி இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஒன்றா இரண்டா சொல்வதற்கு.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-ஜூலை-201920:56:17 IST Report Abuse
r.sundaram பி ஜெ பி,காங்கிரஸ் கட்சி எம் எல் ஏக்களை விலை பேசியது என்றால், எம் எல் ஏக்களின் சுய புத்தி எங்கே போயிற்று? இப்படி விலை போகும் ஆட்களுக்கு ஏன் எம் எல் ஏ டிக்கெட் கொடுத்தது காங்கிரஸ் கட்சி? இந்த ஆட்களிடம் எதை கண்டு சீட் கொடுக்கப்பட்டது? அவர்களது நன்னடத்தையா, குணமா, இல்லையே அவர்களது செலவழிக்கும் அளவை பெருத்துதானே சீட் கொடுக்கப்பட்டது? அவர்கள் செலவழித்ததை ஒரே தவணையில் திருப்பி எடுக்க முயற்ச்சிக்கிறார்கள், அதை தப்பு என்று சொல்ல காங்கிரஸ் கட்சிக்கு அருகதை உள்ளதா?
Rate this:
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-201917:07:58 IST Report Abuse
Venkat உங்களால உங்க கட்சிகாரர்களை தக்க வைக்க முடியலை, உங்க மேல எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாம தானே பிஜேபி போறாங்க. அப்பிடி இருக்கும் போது நீங்க எப்பிடி பிஜேபிஐ குறை சொல்ல முடியும். உங்களோட கையாலாகாத தனத்தை இப்பிடி பண்ணி மறைக்கிறீங்களா? இன்னும் கொஞ்ச நாட்களில் மிச்சம் மீதியும் போய்டுவாங்க. அதுக்கு அப்புறம் காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதிட்டு நீங்களும் பிஜேபி போய்டுங்க, பிசிஐ தவிர. அப்போ தான் நீங்க பொழைக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X