தெலுங்குதேசத்தை பா.ஜ.,வுடன் இணைக்க யோசனை

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (72)
Advertisement

ஐதராபாத் : தெலுங்குதேசம் கட்சியினை பா.ஜ.,வுடன் இணைப்பது பலனளிக்கும் என்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பது சந்திரபாபு நாயுடுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.






பதவி இழந்த நாயுடு ;


ஆந்திராவில், சமீபத்திய தேர்தல் வரையில் ஆட்சியில் இருந்தது தெலுங்கு தேசம் கட்சி. நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அக்கட்சி பெரும் தோல்வியடைந்தது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு.





தோல்விக்கு பின்னர் தெலுங்குதேசம் கட்சியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, அக்கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு தாவி விட்டனர். இந்த நிலையில் முக்கிய நிர்வாகிகளின் இந்த கருத்து ஆந்திர அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





பா.ஜ.,வுடன் இணைக்கலாம் :

தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் எம்.பி., ஜே.சி., திவாகர் ரெட்டியும், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாகர் ரெட்டியும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் நேற்று (ஜூலை 10) செய்தியாளர்களிடம் பேசுகையில், '' அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை ; எதிரிகளும் இல்லை. எனவே, தெலுங்குதேசம் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடவேண்டும்.

ஏனெனில், நரேந்திர மோடியின் அனுபவமும், முதிர்ச்சியான கருத்துகளும் சந்திரபாபு நாயுடுவுக்கு தேவைப்படுகிறது,'' என்று கருத்து கூறியுள்ளனர். இது குறித்து தெலுங்குதேசம் கட்சியின் வட்டாரத்தில், ''அவர்கள் இருவரும் பா.ஜ.,வில் ஐக்கியமாக முடிவெடுத்துவிட்டனர். அதனால் அப்படிப் பேசுகின்றனர்,'' என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
16-ஜூலை-201919:27:47 IST Report Abuse
bal கூடவே கூடாது...இந்த ஆட்கள் திருமலை திருடர்கள்....
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
15-ஜூலை-201911:47:26 IST Report Abuse
பொன் வண்ணன் மிக பெரிய ஆபத்து ...இந்திய ஜனநாயகத்திற்கு....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-201922:18:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஹா.. ஹா.. ஹா.. கங்கா தேரி -எப்பவோ - மைலி ஹோகாயீ..
Rate this:
Share this comment
I love Bharatham - chennai,இந்தியா
17-ஜூலை-201911:43:53 IST Report Abuse
I love Bharathamநல்ல சிரி...ஏன்னா அழ வேண்டியது நிரைய இருக்கு .....அமைதி மார்க்கம் நண்பர்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X