விவசாயிகள் தற்கொலை ; ராகுல் கவலை

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி : நாட்டில், கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதன் மீது மத்திய அரசின் கவனத்தை கோருகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசினார்.







இன்று (ஜூலை 11) லோக்சபாவில் பேசிய ராகுல், '' இந்த நாட்டில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான் இந்த அரசின் கவனத்தை அவர்களை நோக்கி திருப்ப நினைக்கிறேன். ஆனால், பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து உறுதியான நடவடிக்கை ஏதுமில்லை.

மத்திய அரசு நேரடியாக, ரிசர்வ் வங்கியிடம் பேசி, கேரள அரசின் ஒப்புதலுடன், விவசாயிகளுக்கு பறிமுதல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.






நேற்று கூட வயநாட்டில் ஒரு விவசாயி, கடன் நெருக்கடியால், வங்கிகளின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 8 ஆயிரம் விவசாயிகளுக்கு பணம் திரும்ப செலுத்தவில்லை என்று வங்கிகள் நோட்டீஸ் அளித்துள்ளன. விவசாயிகள் வாங்கும் கடனுக்காக, சொத்து ஆவணங்களை வங்கிகளிடம் தரவேண்டியிருப்பதே விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் ஆகும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஜூலை-201922:46:41 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸ் ஆட்சியில் நடக்காத விவிசாயிகள் தற்கொலை இப்பொழுது மட்டும் நடப்பது போல இவர் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஒப்புக்கொள்கிறேன், இப்பொழுதும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததை விட இப்பொழுது குறைவு. அது மேலும் குறையும். அதற்கான நடவடிக்கையை இப்பொழுதுள்ள மோடி அரசு கட்டாயம் எடுக்கும். ஆனால் இவர் விடும் முதலை கண்ணீர்தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஜூலை-201919:01:02 IST Report Abuse
ஆரூர் ரங் உன்னோட மச்சான்கூட விவசாயியாமே .பண்ணைவீடு வெச்சு அனுபவிக்கிறாராமே? நல்லாத்தானே இருக்காரு?
Rate this:
Share this comment
Cancel
Murugan - Bangalore,இந்தியா
11-ஜூலை-201918:17:27 IST Report Abuse
Murugan விவசாயிகள் தற்கொலைக்கு காரணமே காங்கிரஸ் தான் . காங்கிரஸ் 70 வருடம் இந்தியாவை குட்டிச்சுவர் ஆக்கி வைத்து இருக்கிறது , எங்கு திரும்பினாலும் லஞ்சம் ஊழல் , அரசியல் வாதிகள் மட்டுமே பணக்காரர்கள் என்ற நிலையை உருவாக்கியது காங்கிரஸ் தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X