விவசாயிகள் தற்கொலை ; ராகுல் கவலை| Dinamalar

விவசாயிகள் தற்கொலை ; ராகுல் கவலை

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (27)

புதுடில்லி : நாட்டில், கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதன் மீது மத்திய அரசின் கவனத்தை கோருகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசினார்.







இன்று (ஜூலை 11) லோக்சபாவில் பேசிய ராகுல், '' இந்த நாட்டில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான் இந்த அரசின் கவனத்தை அவர்களை நோக்கி திருப்ப நினைக்கிறேன். ஆனால், பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து உறுதியான நடவடிக்கை ஏதுமில்லை.

மத்திய அரசு நேரடியாக, ரிசர்வ் வங்கியிடம் பேசி, கேரள அரசின் ஒப்புதலுடன், விவசாயிகளுக்கு பறிமுதல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.






நேற்று கூட வயநாட்டில் ஒரு விவசாயி, கடன் நெருக்கடியால், வங்கிகளின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 8 ஆயிரம் விவசாயிகளுக்கு பணம் திரும்ப செலுத்தவில்லை என்று வங்கிகள் நோட்டீஸ் அளித்துள்ளன. விவசாயிகள் வாங்கும் கடனுக்காக, சொத்து ஆவணங்களை வங்கிகளிடம் தரவேண்டியிருப்பதே விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் ஆகும்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X