ஏன் விலகணும்: குமாரசாமி குதர்க்கம்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (23)
Advertisement
Kumaraswamy, resign, குமாரசாமி, கர்நாடகா, ராஜினாமா

பெங்களூரு: முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் என்ன? என கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே பல்வேறு அதிருப்தி காரணமாக காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள், ராஜினாமா செய்தனர். பா.ஜ.வினர் ஜனநாயக படுகொலை செய்து விட்டதாக கூறி காங்கிரஸ், ம.ஜ.த. தலைவர்கள் ராஜ்பவனை முற்றுகையிட முற்பட்டனர்.


கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஆஜராக உத்தரவு


பதவி விலகிய 10 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவர்கள் இன்று(ஜூலை 11) மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதத்தை அளிக்க உத்தரவிட்டது. அது குறித்து இன்றே முடிவு எடுக்கவும் சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின், முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் என்றும், அமைச்சரவையை கலைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.


அவசியம் என்ன?


குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், தற்போது முதல்வர் பதவியை விட்டு ஏன் விலக வேண்டும்? இதற்கான அவசியம் என்ன? கடந்த 2009 - 10ம் ஆண்டில், முதல்வராக எடியூரப்பா இருந்த போது, 8 அமைச்சர்கள் உட்பட 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது எடியூரப்பா பதவி விலகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.





Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜூலை-201906:05:55 IST Report Abuse
meenakshisundaram இவர் முன்பு பிஜேபி யோட கூட்டு வச்சு முதல் அமைச்சரா இரண்டரை வருடம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு பின்பு ஆடம் பிடிச்சு பதவி விலகாம இருந்ததை கர்நாடக மக்கள் தமிழனை போல மறந்து போகலே ,இவரை உட்காரவச்ச காங்.தான் இந்த நிலைக்கு காரணம்.இதே போல காங்.திமுகவையும் தூக்கி வச்சு பல்லக்கு தூக்கறானுங்க தமிழகத்திலே,காங் மக்களுக்கு நம்மை செய்யலேன்னாலும் கெடுதி செய்யாம இருக்கணும் .காஷ்மீர் பிரச்சினைக்கு காங்.தான் காரணமே.
Rate this:
Share this comment
Cancel
S A Sarma - Hyderabad,இந்தியா
11-ஜூலை-201923:06:05 IST Report Abuse
S A Sarma குமாராசாமி அவர்களை கர்நாடக மாநிலத்தின் ஸ்டாலின் என்றே கூறலாம். தேவ கௌடா அவர்கள் அந்த மாநிலத்தின் கருணாநிதி.தேவ கௌடா , கருணாநிதி போல் தன குடும்பம் எப்பொழுதும் பதவியில் இருக்க வேண்டும் என்று விருப்பமுடையவர்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஜூலை-201922:32:38 IST Report Abuse
Ramesh Sargam இந்த ஆள மொதல்ல கர்நாடகாவை விட்டு தொரத்தணும் ஏதோ லக்கு, இரண்டுமுறை Accidental Chief Minister பதவியில் அமர்ந்துவிட்டார். தகுதியினால் அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X