சட்டமன்றமா? நீதி மன்றமா?: பாதை மாறும் பிரச்னை

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (11)
Advertisement
சுப்ரீம் கோர்ட், கர்நாடக சபாநாயகர், மோதல்

புதுடில்லி: எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா குறித்து இன்றைக்குள் (ஜூலை 11) முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, கர்நாடக சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், சபாநாயகருக்கு எந்த அறிவுரைகளையும் நீதிமன்றங்கள் வழங்க முடியாது எனக்கூறியுள்ளார்.


உத்தரவு


காங்கிரசை சேர்ந்த 11 பேர், ம.ஜ.த.வை சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதில் ஒன்பது கடிதங்கள் முறையாக இல்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்.ஐ சேர்ந்த 7 பேர் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த மூன்று பேர் என 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதத்தை வைக்கலாம். இது குறித்து, சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.







மேல்முறையீடு


இந்நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சபாநாயகருக்கு எந்த அறிவுரையையும் நீதிமன்றங்கள் வழங்க முடியாது. ராஜினாமா கடிதங்களை ஒரே நாளில் ஆய்வு செய்ய முடியாது. இது குறித்து முடிவெடுக்க அவகாசம் வேண்டும். இதனால், காலையில் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், நாளை (ஜூலை 12) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறியுள்ளது.

இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இடையிலான மோதல், சட்டசபை மற்றும் நீதித்துறை இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜூலை-201905:58:29 IST Report Abuse
meenakshisundaram இந்த சபாநாயகர் பார்ப்பதற்கு மட்டுமல்ல செயலிலும் குமாரசாமி சாயல் தெரிகிறதே?
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
12-ஜூலை-201916:29:28 IST Report Abuse
narayanan iyer நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி , உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எதாவது ஒரு வழக்கை காலையில் எடுத்துக் கொண்டு மாலையில் தீர்ப்பு வழங்குவீர்களா? சபாநாயகர் அரசு தனி . அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு வழக்கில் நீதிமன்றம் இப்போ ஏன் தலையிடுகிறது? எம்எல் ஏக்களின் வாழ்க்கை ஏன் ஏற்கிறது அவசரமாக?
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஜூலை-201922:14:21 IST Report Abuse
Ramesh Sargam எனக்கென்னமோ இந்த சபாநாயகர் எல்லா கட்சியினரிடமும் ஏதாவது பெரிசா வாங்கி இருப்பார் என தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X