சட்டமன்றமா? நீதி மன்றமா?: பாதை மாறும் பிரச்னை| Dinamalar

சட்டமன்றமா? நீதி மன்றமா?: பாதை மாறும் பிரச்னை

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (11)
Share
சுப்ரீம் கோர்ட், கர்நாடக சபாநாயகர், மோதல்

புதுடில்லி: எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா குறித்து இன்றைக்குள் (ஜூலை 11) முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, கர்நாடக சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், சபாநாயகருக்கு எந்த அறிவுரைகளையும் நீதிமன்றங்கள் வழங்க முடியாது எனக்கூறியுள்ளார்.


உத்தரவு


காங்கிரசை சேர்ந்த 11 பேர், ம.ஜ.த.வை சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதில் ஒன்பது கடிதங்கள் முறையாக இல்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்.ஐ சேர்ந்த 7 பேர் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த மூன்று பேர் என 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதத்தை வைக்கலாம். இது குறித்து, சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


latest tamil news





மேல்முறையீடு


இந்நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சபாநாயகருக்கு எந்த அறிவுரையையும் நீதிமன்றங்கள் வழங்க முடியாது. ராஜினாமா கடிதங்களை ஒரே நாளில் ஆய்வு செய்ய முடியாது. இது குறித்து முடிவெடுக்க அவகாசம் வேண்டும். இதனால், காலையில் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், நாளை (ஜூலை 12) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறியுள்ளது.

இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இடையிலான மோதல், சட்டசபை மற்றும் நீதித்துறை இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X