அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., பேரம்: மம்தா கோபம்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

கோல்கட்டா : கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.



latest tamil news



அரசியல் சாசனத்துக்கு ஆபத்து :

அவர் மேலும் கூறுகையில், “நமது நாட்டு அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது. பா.ஜ.,வின் இந்த அணுகுறையை வன்மையாக கண்டிக்கிறேன். மும்பையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலவந்தமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்குள் கூட பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதுபோன்ற குதிரை பேரத்தை ஊக்குவித்தால் ஜனநாயகம் செத்துப் போகும். ஜனநாயகத்துக்காக போராடும் பிராந்திய மற்றும் மற்ற கட்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். எனக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை.


latest tamil news



பேராசை பிடித்த பா.ஜ.,

எதற்காக பா.ஜ., இவ்வளவு பேராசை கொண்டு அலைகிறது என்று புரியவில்லை. அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று அந்தக் கட்சி நினைக்கிறது. கர்நாடகாவில் வேலை முடிந்தததும் பாஜ, தனது கவனத்தை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை நோக்கித் திருப்பும். அரசுகளை கலைப்பதுதான் அவர்களது வேலையா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.


கர்நாடகா ; கோவா

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்து ராஜினாமா செய்துள்ளனர். கோவாவில், மொத்தமுள்ள 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் 10 பேர் பா.ஜ.,வுக்கு தாவி விட்டனர். ஏற்கனவே, மேற்கு வங்கத்திலும் சில எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பா.ஜ.,வுக்கு தாவியது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையால் தான், முதல்வர் மம்தா கடும் கோபம் கொண்டு பா.ஜ.,வை சாடியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-201908:50:15 IST Report Abuse
ருத்ரா யாராக இருந்தாலும் ரெஸ்டாரெண்ட் குதிரை பேரம் இவற்றை சந்திக்காதவர்கள் இருக்கமுடியாது. நீங்கள் உட்பட மம்தாஜி. அரசியலில் இதுவும் ஒரு அங்கம். மக்களுக்கு உதவக்கூடிய பணம் குதிரை பேரத்திற்கும் பயன் படுவது பற்றி வள்ளுவர் கண்டித்து இருக்கிறாரா என்று கழக அறிவாளிகள் தான் சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201905:13:54 IST Report Abuse
AL.Nachi  TN PDK 😊 பைத்தியம்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
12-ஜூலை-201905:04:10 IST Report Abuse
Anandan குதிரை பேரம் - நவீன தேசபக்தி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X