அரசியல் செய்தி

தமிழ்நாடு

போட்டி இல்லை, ஓட்டு இல்லை: 6 பேர் எம்பி

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (35)
Advertisement

சென்னை : தமிழகத்தில் ராஜ்யசபாவில் 6 காலியிடங்கள் இருந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அதிமுக கூட்டணி :


தமிழகத்தில் காலியாக இருந்த 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

திமுக கூட்டணி :

திமுக சார்பில், சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் திமுக சார்பில் 4 வது வேட்பாளராக வழக்கறிஞர் இளங்கோவும் மனுத்தாக்கல் செய்தார். சுயேட்சைகள் 4 பேர் உள்ளிட்டு மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதில் சுயேட்சை வேட்பாளர் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

போட்டியின்றி தேர்வு

பின்னர் வைகோ மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு 6 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டது.எனவே, அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, சட்டமன்றத்தின் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.
தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழ்களை 6 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் பெற்றுக்கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
11-ஜூலை-201921:11:49 IST Report Abuse
அசோக்ராஜ் தேசியவாத கட்சி பிஜேபி இதுவரை ஒரு தேசத்துரோக கேஸ் கூட போட்டதில்லை. ஆனால் தேசத்துரோக கட்சி என்று சொல்லப்படும் டீம்கா ஒரு கேஸ் போட்டு தண்டனையும் பெற்றுக்கொடுத்த விட்டது. கடவுளின் திருவிளையாடல்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஜூலை-201900:50:48 IST Report Abuse
Anandanதன்னை யோக்கியான்னு சொல்லிக்கிறவன் எப்போது அப்படி இருப்பதில்லை அதுதான் உண்மை....
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
11-ஜூலை-201921:00:46 IST Report Abuse
தாண்டவக்கோன் //பிஜேபி சப்போர்ட்டர்களும் ஏன் அப்போது அமைதியாக இருந்தார்கள்// அதுவா, ஒரு சீட்டுகூட பேரலயா, அதுனாலதான்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஜூலை-201900:51:23 IST Report Abuse
Anandanநீங்க வேற நொந்து போயிருக்கவங்களை குத்தி கிளறி. ராசா புலம்பலை கேட்கலையோ அதெல்லாம் இதனால்தான்....
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூலை-201919:38:22 IST Report Abuse
rajesh so this is called democracy. very good joke
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X