சென்னை : சென்னை கிண்டியை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று (ஜூலை 11) காலை போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., நடராஜன் டூவீலர் மீது கான்கிரீட் கலவை லாரி மோதி, பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் இடது பக்கமாக எஸ்.ஐ., சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் சிமென்ட் கலவை செய்யும் கனரக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்திச்சென்று திடீரென பூந்தமல்லி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக நடராஜனின் டூவீலர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்.
இதனைத் தொடர்ந்து கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சதீஷை போலீசார் கைது செய்து விசாரித்து உயிரிழந்த நடராஜனின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது, உயிரிழப்பக்கு காரணமாக அமைந்தது என ஓட்டுநர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE