பொது செய்தி

இந்தியா

தேனியில் நியூட்ரினோ மையம்; நீங்கியது ஐயம்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொட்டிபுரம் கிராமம் அருகே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து, நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது.
இந்த திட்டத்துக்காக, மலை அடியில், 2.5 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை தோண்ட திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசும் ஒப்புதல் தந்துள்ளது. இதையடுத்து, 2015ல், இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனி மாவட்டம் பொட்டி புரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, அங்கு நியூட்ரினோ மையம் அமைய உள்ளது. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆயவகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நியூட்ரினோ:


நியூட்ரினோ என்பது, மின்னியல் ரீதியில், நேர்மறை, எதிர்மறை இன்றி, நடுத்தன்மை உடைய நுண்துகள். எலக்ட்ரானை ஒப்பிடுகையில், இதன் அடர்த்தி, மிகக் குறைவு. கதிரியக்க தாக்கத்தால், நியூட்ரினோ உருவாகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம், புவியின் உள்கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
12-ஜூலை-201909:22:37 IST Report Abuse
ரத்தினம் எங்களோட வேலை.. மணல் கொள்ளை , ஏரியை வளச்சு பிளாட் போடுறது , லஞ்சம் வாங்கிறது , கல்வியை வித்து யாவாரம் பண்றது, திருட்டு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிறது, சிம் கார்டுல கோடிக்கணக்கில் காசு பாக்கிறது, நல்லா துட்டு அடிக்கிற திட்டம் ஆரம்பிக்கிறது , அரசு ஊழியர்களுக்கு தேவை இல்லாத சலுகைகள் குடுத்து கூட்டு கொள்ளை அடிப்பது ....இப்படி .. நமக்கு தெரிந்ததெல்லாம் ஓசி டிவி, மானாட மயிலாட , துட்டு அடிக்கிறதுக்கு ஓட்டு, ஓட்டுக்கு துட்டு , டாஸ் மாக் , குவார்ட்டர், கோழி பிரியாணி , துணைவிக்கு இணைவிகள், தாலி அறுப்பது, ஓசி கேக், ஓசி பிரியாணி, மக்களை ஏமாற்றுவது, அப்பாவி எவனாவது கிடைத்தால் வசை பாடுவது........... மத்திய அரசு மக்கள் நலத்துக்காக கொண்டு வர்ற நதி நீர் இணைப்பு, எட்டு வழி சாலை கல்வியை மேம்படுத்தும் நவோதயா, நீட்., பொருளாதார,அறிவியல் திட்டங்கள் இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. நியூட்ரினோ ன்னா சாக்கலேட்டுன்னு நினைக்கிட்டு இருந்தோம், . என்னா.. அது மத்திய அரசு திட்டமா? அப்போ மோடி ஒழிக, பெரியார் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201907:09:12 IST Report Abuse
venugopal narayanan so..we look forward to one more agitation by Tamil Nadu savers Time pass...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜூலை-201907:04:20 IST Report Abuse
Nallavan Nallavan நிறைய விஞ்ஞானிகள் இங்கே கருத்து எழுதியிருக்கிறார்கள் ...... ஆழமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் ...... இந்திய அரசு இவர்களைப் பயன்படுத்தத் தவறி விட்டது என்பதே என்னுடைய வேதனை ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X