சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே, 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எளம்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்,66, இவர், இதேபகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பிப்., 22ம் தேதி, இவரது கடைக்கு வந்த, இதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து, சிறுமியின் தாய் பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்தார். புகாரின் பேரில், மகளிர் போலீசார் தர்மலிங்கத்தை போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், தர்மலிங்கம் ஜாமினில் வெளிவந்தார்.

இந்த வழக்கு பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்தார். அதில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்படி ஐந்து வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
12-ஜூலை-201910:51:17 IST Report Abuse
S.P. Barucha முதியவன் அல்ல காமுகன்
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
12-ஜூலை-201908:01:43 IST Report Abuse
Krish அசுரர் வதம் படம் போல அப்பா வந்து வதம் செய்யாமல், கோர்ட்டால் தப்பித்தான்.. தினமலர், இது போல் குற்றம் செய்தவரின் புகை படங்களை கடைசி பக்கத்தில் போட்டு, இன்று வரை இவர்கள் , நாளை நீங்களா என்று குற்ற தடுப்பிற்கு உதவ வேண்டும்., அரசு செலவில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.,
Rate this:
Cancel
11-ஜூலை-201922:37:24 IST Report Abuse
ஆப்பு அந்த 10 ஆயிரத்தை பாதிக்கப் பட்டவங்களுக்கு குடுக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X