ராகுலுக்கு ராஜ்நாத்சிங் பதிலடி

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் விவசாயிகளின் நிலை குறித்து அரசு கவலை கொள்வதில்லை என காங்., எம்.பி., ராகுல், லோக்சபாவில் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு ராஜ்நாத் தக்க பதிலடி கொடுத்தார்.காங்., தலைவர் பதவியை துறந்தபின், முதன்முதலாக லோக்சபாவில் இன்று ராகுல் உரையாற்றினார். அவரது உரை: கேரளாவில் விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. வயநாட்டில் விவசாய கடனை செலுத்த முடியாமல், விவசாயி

புதுடில்லி: நாட்டில் விவசாயிகளின் நிலை குறித்து அரசு கவலை கொள்வதில்லை என காங்., எம்.பி., ராகுல், லோக்சபாவில் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு ராஜ்நாத் தக்க பதிலடி கொடுத்தார்.



latest tamil news



காங்., தலைவர் பதவியை துறந்தபின், முதன்முதலாக லோக்சபாவில் இன்று ராகுல் உரையாற்றினார். அவரது உரை: கேரளாவில் விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. வயநாட்டில் விவசாய கடனை செலுத்த முடியாமல், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணக்கார வியாபாரிகளுக்கு சலுகைகள் காட்டும் மத்திய அரசு, விவசாயிகளின் நிலை குறித்து கவலைப்படாமல் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது. விவசாயிகளை காக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news





ராஜ்நாத் பதிலடி:


'விவசாயிகள் இந்த நிலைமைக்கு காரணம், காங்., கட்சி தான்' என ராகுலின் பேச்சுக்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்தார்.


latest tamil news



அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: விவசாயிகள் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் தான். விவசாயிகளின் பிரச்னை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கவில்லை. காங்., ஆட்சியின் காலத்தில், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்தது.
பிரதமர் மோடியின் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிசான் மன் தன் யோஜனா திட்டம் மூலம், விவசாயிகளின் வருவாய், 20 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிலடி கொடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
12-ஜூலை-201911:22:27 IST Report Abuse
D. Selestine Arputharaj பிரதமர் மோடியின் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ................. இன்னும் எவ்ளோ நாள்தான் காங்கிரெஸ்ஸை குறை சொல்லிட்டு இருப்பிங்க பீ ஜீ பீஈ .....ஏதாவது பண்ணுங்கப்பா உருப்படியா ..........
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-ஜூலை-201910:11:56 IST Report Abuse
Cheran Perumal நேரடியாக பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்ன செய்கிறது? இவர் அதைப்பற்றி கேட்காதது அரசியல் காரணத்தினாலா?
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
12-ஜூலை-201907:50:32 IST Report Abuse
Krish சொந்த தொகுதியில் ஒருவர் இறந்தது, வருத்தம் தரும் நிகழ்ச்சி, இன்சூரன்ஸ் காப்பீடு தரவில்லையா. உண்மையான Karanam என்ன என்று தொகுதி உறுப்பினராக இவர் இன்னும் தகவல் தந்து இருந்தால் சற்று வலிமையாக இருக்கும், விவசாயிகளின் உண்மையான குரலாகவும் இருக்கும். இப்படி அவசத்தில் பேசி இருக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X