பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 11, 2019
Share
Advertisement
ஜூலை 12, 2002மணி கிருஷ்ணசுவாமி: வேலுாரில், லட்சுமி நரசிம்மச்சாரி - மரகதம்மாள் தம்பதிக்கு மகளாக, 1930 பிப்.,3 ல் பிறந்தார்; இவரது இயற்பெயர் மணி பெருந்தேவி. ஆறு வயதில், தன் தாய் மரகதவல்லியிடம், வயலின் கற்றுத் தேர்ந்தார். இவர் இசை பயிற்சிக்கு, முதல் ஆசானாக, சங்கீத வித்துவான் கோபாலாச்சாரி என்பவர் அமைந்தார். தன் சிறு வயதிலேயே, 500 பாடல்களுக்கு மேல் கற்றார். மேல்நிலைப் பள்ளிப் படிப்பு
 இதே நாளில் அன்று

ஜூலை 12, 2002
மணி கிருஷ்ணசுவாமி: வேலுாரில், லட்சுமி நரசிம்மச்சாரி - மரகதம்மாள் தம்பதிக்கு மகளாக, 1930 பிப்.,3 ல் பிறந்தார்; இவரது இயற்பெயர் மணி பெருந்தேவி. ஆறு வயதில், தன் தாய் மரகதவல்லியிடம், வயலின் கற்றுத் தேர்ந்தார். இவர் இசை பயிற்சிக்கு, முதல் ஆசானாக, சங்கீத வித்துவான் கோபாலாச்சாரி என்பவர் அமைந்தார். தன் சிறு வயதிலேயே, 500 பாடல்களுக்கு மேல் கற்றார். மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், சென்னை கலாஷேத்ராவில், சங்கீத சிரோமணி வகுப்பில் சேர்ந்தார்.

சங்கீத கலாநிதி விருது பெற்ற, மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலுார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்ரமணிய ஐயர், பாபநாசம் சிவன், 'டைகர்' வரதாச்சாரியார் போன்ற வித்வான்களிடம், முறையாக இசை பயின்றார். 1989ல், சோவியத் யூனியனிலும், 1991ல், ஜெர்மனியிலும் நடந்த இந்திய விழாக்களில், கச்சேரிகள் நடத்தி உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வானாக இருந்தார். கர்நாடக இசைக் கலைஞர், மணி கிருஷ்ணசாமி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றவர். 2002 ஜூலை, 12ல் காலமானார்.

அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X