பொது செய்தி

இந்தியா

'நியூஸ்பிரின்ட்' மீது சுங்க வரி; வாபஸ் பெற வலியுறுத்தல்

Updated : ஜூலை 11, 2019 | Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: ''நியூஸ்பிரின்ட் எனப்படும், செய்தித்தாள் அச்சிட பயன்படும் தாள் மீது, மத்திய அரசு புதிதாக விதித்துள்ள, 10 சதவீத சுங்க வரியை உடனடியாக விலக்க வேண்டும்,'' என, ராஜ்யசபா, எம்.பி., வீரேந்திர குமார் வலியுறுத்தினார்.


மத்திய பட்ஜெட் தொடர்பாக, ராஜ்யசபாவில் இன்று(ஜூலை 11) நடந்த விவாதத்தில், வீரேந்திரகுமார், எம்.பி., பேசியதாவது: கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, நியூஸ் பிரின்ட் மீது, சுங்க வரி விதிக்கப்படாத நிலையில், இந்த பட்ஜெட்டில், 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், செய்தித்தாள் வெளியிடும் நிறுவனங்களுக்கு, பலத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் நியூஸ்பிரின்ட், உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக இல்லை. மேலும், இந்திய தயாரிப்பு நியூஸ் பிரின்ட்டை, அதிவேக அச்சிடும் இயந்திரங்களில் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, வெளிநாடுகளில் இருந்து தான், இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.நியூஸ்பிரின்ட் தயாரிப்பிற்காக, மரங்கள் வெட்டப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும், தெரிவிக்கப்படுகிறது. இதனால், சீனாவில், பல நியூஸ்பிரின்ட் தயாரிப்பு ஆலைகள், மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இறக்குமதியாகும் நியூஸ்பிரின்ட் மீது, சுங்க வரி விதித்திருப்பது, செய்தித்தாள் வெளியிடும் நிறுவனங்களுக்கு, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை, மத்திய அரசு, உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, வீரேந்திர குமார் எம்.பி., பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nimirthu Nill - Coimbatore,இந்தியா
12-ஜூலை-201909:36:25 IST Report Abuse
Nimirthu Nill Why only 10% impose 25% .. They are getting revenue over advertisement as well.. Rule should be applicable for all.
Rate this:
Share this comment
ARUMUGAKANI VELSAMY - tirunelveli,இந்தியா
12-ஜூலை-201911:46:30 IST Report Abuse
ARUMUGAKANI VELSAMYமிகவும் சரி. இவர்கள் விளம்பரத்திற்கு ஒழுங்காக கணக்கு காட்டுவது இல்லை. டூட்டியை கூட்ட வேண்டும் . அப்பத்தான் இங்கு உள்ள பேப்பர் மில் பிழைக்க முடியும்....
Rate this:
Share this comment
ARUMUGAKANI VELSAMY - tirunelveli,இந்தியா
12-ஜூலை-201911:50:42 IST Report Abuse
ARUMUGAKANI VELSAMYநாட்டிலேயே விளம்பரத்திற்கு அதிக கட்டணம் வாங்கி, முறைகேடு செய்பவர்கள் தினசரி பத்திரிக்கையாளர்கள். வரியை மிக அதிகமாக போட வேண்டும். அப்படி செயதால் தான் இந்தியாவில் உற்பத்தியாகும் காகிதத்திற்கு விலை கிடைக்கும். மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும்....
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
12-ஜூலை-201904:52:23 IST Report Abuse
Subramanian Arunachalam தயவு செய்து நியூஸ் பிரிண்ட் மீது வரியை குறைக்க வேண்டாம் . முடிந்த வரையில் அதிகப்படுத்தவும் . வரி அதிகமானால் தினசரியின் விலையை அதிகப்படுத்தி அதை சரி செய்ய போகிறார்கள் . அதனால் தினசரிக்கு எந்த பாதிப்பும் இல்லை . மற்றபடி இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
12-ஜூலை-201900:39:49 IST Report Abuse
Raj நாட்டுலே அவனவன் குடிக்க தண்ணியில்லாம, காசுக்கு வாங்கி குடிச்சு தவிச்சுட்டு இருக்கான். விளம்பரம் செய்ய நியூஸ்ப்ரின்ட் எதுக்கு வரியில்லாம குடுக்கணும். நம்ம சரவணா ஸ்டோர்ஸ், கல்யாண் தங்க நகை கடை, மோடி பிஜேபி, காங்கிரஸ், அ தி மு க சாதனை விளம்பரம் எல்லாம் செய்வதற்கு கொஞ்சம் காசு அதிகமா குடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவாங்க ? நாளிதழ்கள் விலை அதிகரித்தல் நல்லது தான். மக்கள் இந்த நியூஸ்பிரிண்ட்டினால் சுற்று சூழல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு காகிதமும் மக்கள் படித்த பின்பு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்ய அரசாங்கம் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும். இதையெல்லாம் மனதில் கொண்டு தான் வரி விதிக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X