மணல் கடத்தல் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் ஒருவர் கைது

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (2)
Share
சிதம்பரம்: சிதம்பரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் லால்புரத்தில் வாகன சோதனை செய்தனர். அப்போது பதிவு எண் இல்லாமல் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். டிராக்டரை ஓட்டி வந்தது குமராட்சி அடுத்த வெள்ளூரைச் சேர்ந்த பழனிசாமி மகன் பழனிராஜா, 18, என்பதும், பாலுத்தாங்கரை

சிதம்பரம்: சிதம்பரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் லால்புரத்தில் வாகன சோதனை செய்தனர். அப்போது பதிவு எண் இல்லாமல் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். டிராக்டரை ஓட்டி வந்தது குமராட்சி அடுத்த வெள்ளூரைச் சேர்ந்த பழனிசாமி மகன் பழனிராஜா, 18, என்பதும், பாலுத்தாங்கரை வெள்ளாற்றில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. மேலும், மணல் கொள்ளையில் மேலமூங்கிலடியைச் சேர்ந்த ராமையா மகன் பாண்டியன், சிவகாமி நகர் ராஜசேகர் மகன் மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, டிராக்டரை பறிமுதல் செய்து, பழனிராஜாவை கைது செய்தனர். மணிகண்டன், பாண்டியனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X