கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
plastic,high court,பிளாஸ்டிக்,தடை,அபராதம்,கூடாது

சென்னை: 'தமிழகத்தில் பிளாஸ்டிக்கே கூடாது' என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான அரசின் தடையுத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நீதிபதிகள் அபராதத்தை கடுமையாக்கி பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு 'கேரி பேக்' உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து 2018 ஜூனில் உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பை கேரி பேக் மற்றும் பேப்பர் கப் உற்பத்தி நிறுவனங்கள் சங்கங்கள் தனியார் என 37க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. பிரதான வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.

தடை விதித்த நாடுகள்:


தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன், கூடுதல் பிளீடர் விஜய் பிரசாந்த், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், வெங்கடசாமி, பாபு, திருமலைசாமி ஆகியோர் ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


பொது நலன் கருதி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த நாடுகள், தடை விதிக்க உள்ள நாடுகளின் விபரங்களை கூடுதல் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்களும் இதுபற்றி கூறியுள்ளனர். மக்களின் நலன் கருதி அரசியலமைப்பு சட்டத்தில் கூறியபடி அரசுக்கு இருக்கும் பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகுதி உள்ளது:


மத்திய அரசு வழங்கிய அதிகாரங்கள் அடிப்படையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு தகுதி உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமல் விட்டால் நீர் நிலைகளில் குவிந்து தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து விடும். அதனால் நோய்கள் பெருகும். மணல் பரப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பதால் மழை நீர் நிலத்துக்குள் போகாமல் தடுக்கப்படும்; நிலத்தடி நீர் உற்பத்தி குறையும். 'கேரி பேக்' பயன்பாடு நீர் நிலைகளை பாதிக்கும்.

சுற்றுச்சூழலையும் மாசு படுத்தும். அதனால் மாநில அரசு பிறப்பித்த தடை உத்தரவு அவசியம் தான் என கருதுகிறோம்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததால் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பாதுகாத்துள்ளது; அவர்கள் மாசு படாத குடிநீர் காற்றை அனுபவிக்க முடியும். தனி நபர்களின் நலன்களை விட பொது மக்களின் நலன் பெரிது. அதனால் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறமுடியாது. ஒருமுறை பயன்படுத்தியதும் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் போது அதே பிளாஸ்டிக்கை பயன்படுத்தி நுகர்பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும் அரசு பரிசீலித்திருக்க வேண்டும்.

மறுபரிசீலனை:


பிளாஸ்டிக்கால் பலமுறை சுற்றப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக அரசு கூற முடியாது. எனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வழியாக சில நுகர்பொருட்கள்

விற்பனைக்கு விலக்கு அளித்திருப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொருட்களின் மீது பலமுறை சுற்றப்படும் பிளாஸ்டிக் மற்றும் கவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும். அப்போது தான் தடை என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் கவரில் ஆவின் பால் வழங்குவதற்கு பதில் பாட்டில் அல்லது மாற்று வழிகளை பயன்படுத்த அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஜனவரியில் இருந்து தடை உத்தரவு அமலுக்கு வந்தாலும் அது முழுமையானதாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். தடை இருந்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் எளிதாக கிடைக்கிறது.

அரசு உத்தரவு பேப்பர் வடிவத்தில் தான் இருக்கிறது. அதனால் விற்பனையாளர்கள் இருப்பு வைப்பவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கவில்லை என்றால் தடை உத்தரவு முழுமையானதாக இருக்காது. துணி சணல் பைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே உத்தரவு:


ஏற்கனவே இதே உயர் நீதிமன்றம் பல்வேறு வடிவங்களில் ஆன பிளாஸ்டிக்கை சந்தையில் இருந்து படிப்படியாக ஒழித்து தடை உத்தரவை இந்த ஆண்டுக்குள் கண்டிப்புடன் அமல்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். வெற்று தாளில் உத்தரவாக இல்லாமல் பிளாஸ்டிக் தடை உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
12-ஜூலை-201920:19:21 IST Report Abuse

Rajasமக்களுக்கு ரொட்டி கூட இல்லையென்று புகார் சொன்ன போது பிரெஞ்சு அரசி கேக் சாப்பிட சொல் என்று சொன்னாராம் . நீதிமன்றம் வழக்கம் போல Source of Issue பற்றி ஆராயாமல் தமாஷ் உத்தரவு. Urbanisation இந்த ஒன்று தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். நகரங்களை வளர்த்து விட்டு இப்போது பிரச்சினை என்றால் எப்படி. முன்பு சென்னையின் மக்கள் தொகை முன்பு 3 லட்சம். அப்போது மாடு வளர்த்து லோக்கல் பால் சப்ளை பலர் செய்தார்கள். மேலும் ஆவின் டோக்கன் பால் இருந்தது. மீதமிருக்கும் சிலருக்கு (5000 வரை இருக்கும் என்று தெரிகிறது) ஆவின் கூட பாட்டிலில் சப்ளை செய்தது. இப்போது சென்னையின் மக்கள் தொகை 1 . 5 கோடி. 70 லட்சம் பால் பாக்கெட்டுகள் தினமும் தேவை. இத்தனையையும் எப்படி பாட்டிலில் அடைப்பது. தண்ணீர் இல்லாமல் எப்படி பாட்டிலை சுத்தம் செய்வது. டாஸ்மாக் சரக்கு கூட பிளாஸ்டிக்கில் வந்து விட்டதே. அதை பற்றி ஒன்றுமே இல்லை.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
12-ஜூலை-201919:36:51 IST Report Abuse

oceநாட்டிலுள்ள சூப்பர் மார்கெட்டுகள் ஓட்டல்கள் முக்கியமாக திநகரிலுள்ள சரவணா ஸ்டோர் போன்ற பெரிய கடைகளில் எல்லாம் பெரிய பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அடைத்து தருகிறார்கள். அதை முதலில் தடை செய்யலாம். உணவு பண்டங்கள் சமையல் உணவு பொருட்கள் என அனைத்துக்கும் பிளாஸ்டிக் பைகள் உள்ளன அவைகளை தடை செயதால் அதற்கு மாற்று எது. வெறுமனே பிளாஸ்டிக்கை தடை செய்யுங்கள் என்று கூப்பாடு போட்டால் மட்டும் பத்தாது மனித நாகரிக வளர்ச்சியில் மக்கள் வாங்கும் சக்தி அதிகருத்துள்ள நிலையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக புதியதாக எதையாவது கண்டு பிடித்தாக வேண்டும்.

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
12-ஜூலை-201916:25:17 IST Report Abuse

J.Isaacலஞ்சம் வாங்குகிறவர்கள் யாராயிருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X