கடலுார்: மொபட்டில் 6 மூட்டைகளில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதிரிக்குப்பம் சுடுகாட்டுபாதை வழியாக தனித்தனி மொபட்டில் கெடிலம் ஆற்றில் இருந்து தலா 3 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 6 மூட்டைகளில் மணல் கடத்தி வந்த கே.என்.பேட்டையைச் சேர்ந்த குப்புசாமி, 55; முருகன் மகன் பிரகாஷ், 18; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE