வடலுார்: டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 46 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த விருப்பாச்சியில் இரண்டு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதில் 2487 எண் கொண்ட டாஸ்மாக் கடையை நேற்று முன் தினம் விற்பனையை முடித்துவிட்டு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றனர். நேற்று காலை 12மணிக்கு கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ேள சென்றுபார்த்த போது 426 குவார்ட்டர் மது பாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. திருடுபோன மது பாட்டில்களின் மதிப்பு 46 ஆயிரத்து 610ரூபாய், மேலும் கடையில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணம், திருடப்பட்டு இருந்தது. குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE