பதிவு செய்த நாள் :
மாற்றம்!
கோவா அமைச்சரவை விரைவில்...
காங்.,கிலிருந்து 10 எம்.எல்.ஏ.,க்கள், 'ஜூட்!'
நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்

புதுடில்லி: கோவாவில், ஆளும், பா.ஜ.,வில் இணைந்த, 10 காங்., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், நேற்று டில்லி வந்தனர். அங்கு, பா.ஜ., செயல் தலைவர் நட்டா உட்பட, மூத்த தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சியில் முறைப்படி இணைந்தனர். பின், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித் ஷாவை, முதல்வர் பிரமோத் சாவந்த் சந்தித்து பேச்சு நடத்தினார். இதையடுத்து, கோவாவில், அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்., எம்.எல்.ஏ.,கோவா,அமைச்சரவை,விரைவில்,மாற்றம்



கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமை யில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கோவா முன்னணி மற்றும் சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., ஆட்சியை பிடித்தது. மனோகர் பரீக்கர், முதல்வராக பதவியேற்றார்.


காலமானார்:



கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பரீக்கர், சமீபத்தில், காலமானார். இதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமோத் சாவந்த், புதிய முதல்வராக பதவி ஏற்றார். மொத்தம், 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில், பா.ஜ.,வின் பலம், 17 ஆக இருந்தது. எதிர்க்கட்சிஆன, காங்.,குக்கு, 15 உறுப்பினர்கள் இருந்தனர்.


இந்நிலையில், கோவா சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., உறுப்பினருமான சந்திரகாந்த் கவ்லேக்கர் தலைமையில், 10 காங்., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைவதாக, நேற்று முன் தினம் அறிவித்தனர். இதனால், கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.


பா.ஜ.,வில் இணைவதாக அறிவித்த, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரும், முதல்வர் பிரமோத் சாவந்த்துடன், நேற்று முன்தினம் இரவே, டில்லி வந்தனர். பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில், அதிகாரப்பூர்வமாக, பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர். இதன் மூலம், கோவா சட்டசபையில், பா.ஜ., உறுப்பினர் எண்ணிக்கை, 27 ஆக உயர்ந்துள்ளது. காங்.,கின் பலம், ஐந்து ஆக குறைந்துள்ளது.

விவாதித்தனர்:



இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித் ஷாவை, முதல்வர் பிரமோத் சாவந்த், சந்தித்து பேசினார். கோவா அமைச்சரவை மாற்றம் குறித்து, இருவரும் விவாதித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக இணைந்து உள்ள, 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, கோவா முன்னணி மற்றும் சுயேச்சைகள், பதவி பறிபோகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


பா.ஜ.,வில் இணைந்து உள்ள சந்திரகாந்த் கவ்லேக்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும், பா.ஜ., சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பிறகு, காங்., வலுவிழந்து உள்ளது. கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில், நெருக்கடி நிலவி வருகிறது. எதிர்க்கட்சியாக இருப்பதால், தொகுதி வளர்ச்சிக்கு எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பா.ஜ.,வில் இணைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வுடன் தொடர்வோம்!

பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கோவா முன்னணி கட்சி தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான, விஜய் சர்தேசாய், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் தொங்கு சட்டசபை உருவான போது, எங்களை இழுக்க, காங்., பல முயற்சிகளை செய்தது. ஆனால், நாங்கள், பா.ஜ.,வுடன் கைகோர்த்தோம். மறைந்த முதல்வர் மனோகர் பரீக்கர், கவலைக்கிடமாக இருந்தபோது கூட, எங்களிடம், காங்., பேரம் பேசியது. நாங்கள் துளியும் அசைந்து கொடுக்கவில்லை. கொடுத்த வாக்கில் உறுதியாக இருப்பது எங்கள் பழக்கம். அமைச்சரவை மாற்றம் குறித்து, இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர்கள், பேசி ஒரு முடிவெடுக்கட்டும். அதன் பின், சாதக பாதகங்களை ஆராய வேண்டும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்தாலும், இந்த அரசுடனான கோவா முன்னணி கட்சியின் கூட்டணி, உறுதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


ஜனநாயக படுகொலை!

கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் குழப்பமே, இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கோவாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம், காங்., தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்கு நிலவி வரும், தற்போதைய நிலைமையை அறிந்து வர, அகில இந்திய காங்., செயலரும், கோவா மாநில பொறுப்பாளருமான செல்லகுமாரை, கட்சி தலைமை, கோவா அனுப்பியது. நேற்று முன்தினம் இரவு கோவா வந்த செல்லகுமார், காங்.,கில் மீதமுள்ள, ஐந்து எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த, செல்லகுமார் கூறியதாவது: காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைய கோடிக்கணக்கான ரூபாய் தருவதாக, அக்கட்சி தலைவர்கள் பேரம் பேசி வருவதாக, எங்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே தெரிவித்தனர். தற்போது, மாநில நலனை சமரசம் செய்து, அவர்களுடன் இணைந்து விட்டனர். நரேந்திர மோடியும், அமித் ஷாவும், இந்த தந்திரத்தை தான், கர்நாடகா உட்பட, பல மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றனர். அரசியலை, வியாபாரமாக மாற்றியுள்ளனர். கோவாவில், ஜனநாயக படுகொலையை, பா.ஜ., நிகழ்த்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
13-ஜூலை-201902:51:15 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>எவனுக்கும் ஒருஇழவும் தெரியாதுங்கோ ஆட்டுமந்தைக்கூட்டம்

Rate this:
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
12-ஜூலை-201922:49:08 IST Report Abuse

tamilanதமிழகத்தில் கூட ஊழல்தலைவர் மகன் நடத்திவரும் திமுக கம்பெனியில் சேர சொல்லி அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களிடம் விலை பேசப்பட்டது.........ஆனால் கம்பெனியில் சேர்ந்து மீண்டும் பறம்பறை ஆட்சியை விரும்பவில்லை என கூறிவிட்டார்கள்.......ஆனாலும் சில அறிவுஜீவிகள் என தன்னைத்தானே சொல்லிக்கொள்பவர்கள்.......மீண்டும் மகனுக்கும் ஜால்ரா தட்ட தயாராகிவிட்டனர்........என்னடா இது தமிழகத்தின் சிலருக்கு வந்த சோதனை.......

Rate this:
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
12-ஜூலை-201912:08:01 IST Report Abuse

DSM .S/o PLM மனோகர் பாரிக்கர் உடல் நலம் குன்றி இருந்த போது பாஜக வின் கூட்டணி கட்சியினை விலை பேசியது காங்கிரஸ்.. இப்போது அதே காங்கிரஸ் தானாக கட்சி மாறும் எம் எல் ஏ க்களை பார்த்து புலம்புகிறது. தன் வினை தன்னை சுடும்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X