பதிவு செய்த நாள் :
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாதது ஏன்?
லோக்சபாவில் ராகுல் சரமாரி கேள்வி

புதுடில்லி: ''வறட்சியால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளபோது, அவர்கள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்ய, இந்த அரசு மறுக்கிறது. ''அதேநேரத்தில், தொழில் அதிபர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த அரசு, விவசாயிகளை, மிகவும் தரக்குறைவாக கருதுகிறது,'' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல், லோக்சபாவில் நேற்று குற்றம் சாட்டினார்.

விவசாய கடன்,தள்ளுபடி,லோக்சபா,ராகுல்,கேள்வி


பிடிவாதம்:


தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல் முறையாக, காங்கிரஸ், எம்.பி., ராகுல், நேற்று பேசினார். அப்போது அவர், மத்திய அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் பேசியதாவது: நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவிலாவது நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்கள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்படி கேட்கின்றனர். மத்திய அரசு, இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது.

ஆனால், மிகப் பெரிய தொழில் அதிபர்கள், பணக்காரர்கள் வாங்கிய வங்கி கடன்களில், பல லட்சம் கோடி ரூபாய், எந்த காரணமும் இன்றி, தள்ளுபடி செய்யப்படுகின்றன; இது, மிகவும் ஆச்சரியமாக உள்ளது. விவசாயிகளை தாழ்வானவர்களாக, தரக்குறைவானவர்களாக, இந்த அரசு கருதுகிறதா? கேரள மாநிலத்தில், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; 18 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். என் தொகுதியான வயநாட்டில், சமீபத்தில் ஒரு விவசாயி, கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளார்.

எதிரொலி:


லோக்சபா தேர்தலின்போது, விவசாயிகள் நலனுக்காக, பல திட்டங்களை, பா.ஜ., அறிவித்தது. பல வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அளித்தார். அந்த திட்டங்களையும், வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் பேசியதவாது: இந்த நாட்டை, நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் தான், விவசாயிகளின் இந்த துயர நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. வரும், 2025க்குள், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

ராகுல், நேற்று பேசும்போது, கேரள மாநிலம் சார்ந்த பிரச்னைகளையே அதிகம் பேசினார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில், அவர் வெற்றி பெற்றார். இதன் எதிரொலியாகவே, கேரள பிரச்னைகளுக்கு, ராகுல், முக்கியத்துவம் கொடுத்தார்.

'ரயில்வேயை தனியார் மயமாக்குவதா?'

லோக்சபாவில் நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: விமான போக்குவரத்து துறை அமைச்சர், விமான துறையை, தனியார் மயமாக்க விரும்புகிறார். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறைக்கு சொந்தமான சொத்துகளை, தனியாரிடம் விற்க விரும்புகிறார். இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள், இந்த நாட்டையே விற்பனை செய்து விடுவார். ரயில்வே செலவினங்கள் தொடர்பாக, முந்தைய ரயில்வே அமைச்சர் பிரபு, ஒரு தொகையை குறிப்பிட்டார். இப்போதைய பட்ஜெட்டில், மிக அதிகமான ஒரு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை, மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்க முயற்சிக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201902:46:12 IST Report Abuse

TAMILANதொழில் அதிபர்களின் கடனை தள்ளிப்படி செய்தால் கட்சிக்கும் , மந்திரிகளுக்கு கமிஷன் கிடைக்கும் . விவசாயிக்கு தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இது தான் நேர்மையான மத்திய அரசு. 56இன்ச் மார்புள்ள நேர்மையான அரசு.

Rate this:
12-ஜூலை-201919:18:16 IST Report Abuse

ஆப்புவிவசாயிகள் பட்ட கஷ்டத்துக்கு 6000 ரூவா குடுத்தா போறும். அதுக்கு மேலே கேட்டா நாங்க எங்கே போறது?

Rate this:
Arachi - Chennai,இந்தியா
12-ஜூலை-201916:39:43 IST Report Abuse

Arachiவிவசாயி கடனை தள்ளுபடி செய்யக்கூடாது கோடிக்கணக்கில கடன் வாங்கிறான் பாருங்க அவனுவ கடனன தள்ளுபடி செய்யலாம். எலெக்ஷன் வரைக்கும் சவுக்கிதர் சொல்லிவிட்டு முடிஞ்சி காரியம் ஆனவுடன் அதை எடுத்திட்டது மாதிரி

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X