பொது செய்தி

தமிழ்நாடு

இது நொய்யல் ஆறா... குப்பை ஆறா? வாய்க்காலில் அடைப்பு ஏராளம் ; கலெக்டர் மனசு வைக்கணும்

Added : ஜூலை 11, 2019
Advertisement
 இது நொய்யல் ஆறா... குப்பை ஆறா? வாய்க்காலில் அடைப்பு ஏராளம் ; கலெக்டர் மனசு வைக்கணும்

கோவை:கோவையை கடக்கும் நொய்யல் ஆற்றின் நீர் வழித்தடங்கள் கழிவு நீராலும், குப்பையாலும், நாணல் புற்கள் வளர்ந்தும் அடைபட்டுக் கிடக்கிறது. இது நொய்யல் ஆறா, குப்பை ஆறா என கேட்கும் அளவுக்கு, நீர் வழிப்பாதைகள் படுமோசமாக காணப்படுகின்றன.நீர் நிலைகள் மிகவும் முக்கியம் என்பதை, சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சம் தமிழக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
நம்மூரில் குளங்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், நீர் வழித்தடங்கள் பராமரிப்பின்றி, ஆக்கிரமிப்புகளால் சுருங்கியிருக்கிறது.மீட்க வேண்டும்கழிவு நீர் கலந்திருக்கிறது; குப்பை கொட்டுமிடமாக பயன்படுத்தப்படுகிறது. ஆளுயரத்துக்கு நாணல் புற்கள் வளர்ந்து, நீர் செல்வதை தடுக்கிறது. இதனால் இன்றைய தினம் நீர் வழித்தடத்தை, மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கூடுதுறையில் துவங்கும் நொய்யல் ஆறு, சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்ததும் இரண்டாக பிரிந்து பயணிக்கிறது.
ஒரு வழியில் புதுக்குளம், கோளாரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி (முத்தண்ணன்), செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளங்களை கடந்து, சூலுார் குளங்களுக்குச் செல்லும்.மற்றொரு வழித்தடத்தில், சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து குனியமுத்துார் அணைக்கட்டுக்கு வரும். குனியமுத்துார் வாய்க்கால் வழியாக கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டையை நிரப்பி விட்டு, கோயமுத்துார் அணைக்கட்டு (சேத்துமா வாய்க்கால்) வழியாக, உக்கடம் குளத்துக்கு ஒரு வழித்தடத்திலும், புட்டுவிக்கி வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கும் தண்ணீர் வரும்.
நொய்யல் ஆற்றில் குப்பைகுனியமுத்துார் வாய்க்காலில் வரும், தண்ணீர் பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்துக்கும், செங்குளத்துக்கும் செல்லும் வகையில், நீர் வழித்தடம் இருக்கிறது.இதில், பேரூரை கடக்கும் குனியமுத்துார் வாய்க்கால், நொய்யல் ஆறா அல்லது குப்பையாறா என்று கேட்கும் அளவுக்கு படுமோசமாக காணப்படுகிறது.பேரூர் பகுதியில் சேகரிக்கப்படும், குப்பையை வாய்க்காலில் கொட்டுகின்றனர். கழிவு நீரும் இங்குதான் சங்கமமாகிறது. சில நாட்களுக்கு முன் கால்வாயின் ஒரு பகுதியை துார்வாரியுள்ளனர்.அகற்றிய கழிவுகளை எடுத்துச் செல்லாமல், மலைபோல் கரையில் குவித்து வைத்திருக்கின்றனர்.
மழை பெய்யும்போது, மீண்டும் கால்வாய்க்குள் விழும்.ஆகவே, ஏரி, குளம், குட்டைகளை துார்வாரினால் மட்டும் போதாது; நீர் வழித்தடங்களான வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதர்மண்டிக் கிடக்கும் கால்வாயை சுத்தப்படுத்தி, மீண்டும் அசுத்தப்படுத்தாத அளவுக்கு, கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும்.குறிச்சிக்கு தண்ணீர் வந்தது எப்படி?சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து, புதுக்குளம் வழியாக நகர்ப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்லும். அந்த வழியாக தண்ணீரை அனுப்பாமல், குனியமுத்துார் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அதிலும், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண் சமுத்திரம், பேரூர் சுண்டக்காமுத்துார் குளம், அய்யன் குட்டையில் நீர் நிரப்பாமல், கோயமுத்துார் அணைக்கட்டு வழியாக, புட்டுவிக்கி வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. வழித்தடங்களில் உள்ள குளங்களை நிரப்பாமல், நேரடியாக குறிச்சி குளத்துக்கு தண்ணீரை கொண்டு வந்ததிலும், 'அரசியல்' இருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X