பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் இ--பீட் வசதி: எஸ்.பி., துவக்கி வைப்பு

Added : ஜூலை 11, 2019
Advertisement

விக்கிரவாண்டி: மாவட்டத்தில் முதன் முதலாக விக்கிரவாண்டியில் போலீஸ் ரோந்து பணி பட்டா புத்தகத்திற்கு மாறாக ஆன் லைன் (இ-பீட்) பார் கோடு வசதியை எஸ்.பி., துவக்கி வைத்தார்.விக்கிரவாண்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் பகல், இரவு நேரங்களில் ரோந்து போலீசார் பார்வையிட்ட நேரத்தை குறிப்பிட்டு, கையெழுத்திட பட்டா புத்தகம் இருக்கும்.இதற்கு மாறாக ஆன்லைனில் பார் கோடு முறையில் மொபைல் ஸ்கேனர் மூலம் போலீசார் பார்வையிட்ட நேரத்தை குறிக்க இ-பீட் பார் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் முதல் முதலாக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் துவங்கப்பட்ட இந்த வசதியை எஸ்.பி., ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏ.டி.எம்.,கள், வங்கிகள், முக்கிய வணிக வாளகம், கிராமத்தின் முக்கிய பகுதிகள் போன்ற இடங்களில் போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் போது அந்த பகுதியில் உள்ள மையத்தில் இருக்கும் பட்டா புத்தகத்தில் கையொப்பமிட்டு நேரம், தேதியை எழுதுவது வழக்கம்.பட்டா புத்தகங்களுக்கு மாறாக ஆன் லைன் பார் கோடு ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட அந்த மையத்தில் பொருத்தப்படும். இந்த பார் கோடு அட்டையில் ரோந்து செல்லும் போலீசார் தான் வைத்திருக்கும் ஆன்ராய்டு மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். இது உடனடியாக எந்த ஊர், தேதி, நேரம் உள்ளிட்ட அனைத்தையும் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கோ அல்லது நிலைய அதிகாரியின் மொபைல் போனுக்கோ குறுஞ்செய்தியாக பதிவாகிவிடும்.தற்போது 18 இடங்களில் பார்கோடு அட்டை பொருத்தப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் பயிற்சி டி.எஸ்.பி., பார்த்திபன் முழு முயற்சியால் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் பார் கோடு வசதி விரைவில் மாவட்டம் முழுவதும் நடைமுறை படுத்தப்படும்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.பயிற்சி டி.எஸ்.பி., பார்த்திபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினகரன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X