பொது செய்தி

தமிழ்நாடு

ஓங்கூரில் மணல் கொள்ளையர்கள், மவுனம் காக்கும் அதிகாரிகள்

Added : ஜூலை 11, 2019
Advertisement

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள ஓங்கூர் ஆறு மற்றும் ஆற்றையொட்டியுள்ள தனியார் நிலங்களில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட் அருகே, ஓங்கூர் ஆறு உள்ளது. இந்த ஆற்று மணலை சமூக விரோதிகள், அரசியல் பின்புலத்தில் உள்ள கும்பல்கள், வாகனங்கள் மூலம் இரவு, பகல் என பாராமல் தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர்.புதுச்சேரி ஜவகர் நகரில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலம் ஓங்கூர் ஆற்றோரம் உள்ளது. இந்த நிலத்திலுள்ள மணலை, தொடர்ந்து ஒரு கும்பல் கொள்ளைடித்து வந்தது.இதுகுறித்து, சிவக்குமார் கடந்த 8ம் தேதி, கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இதே போல், எஸ்.பி., திண்டிவனம் சப் கலெக்டர், தாசில்தார், டி.எஸ்.பி., டவுன் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., உள்ளிட்டோருக்கும் புகார் மனு அனுப்பியிருந்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதேபோன்று, ஓங்கூரில் உள்ள சிவக்குமார், ரேவதி, பாஸ்கரன் உள்ளிட்ட பலரது பட்டா நிலங்களில் மேற்பரப்பில் உள்ள களிமண்ணை வெட்டி எடுத்துவிட்டு, 5 அடிக்கு கீழ் உள்ள மணலை, கரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், இரவு நேரங்களில், டிராக்டர்களில் கொள்ளையடித்து வருகின்றது.இதுகுறித்து ஒலக்கூர் போலீசாரிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகிறது.ஓங்கூர் ஆறு மற்றும் அங்குள்ள தனியார் பட்டா நிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தி, அதில் ஈடுபடுபவர்கள் மீது, கலெக்டர் மற்றும் எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எஸ்.ஐ., இட மாற்றத்தால்தொடரும் மணல் திருட்டுகடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, ஓங்கூர் ஆற்றில் நடைபெற்று வந்த மணல் திருட்டை, ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தனது அதிரடி நடவடிக்கையால் தடுத்து நிறுத்தினார். மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்தும், மணல் கடத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்ததால், ஓரளவிற்கு மணல் திருட்டு தடுக்கப்பட்டது.கடந்த 20 நாட்களுக்கு முன், அவர் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு, மணல் கொள்ளையர்கள் ஓங்கூர் ஆற்றுப்படுகை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மணல் வளத்தையும் கொள்ளையடித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X